பக்கம்:பாட்டுத் திறன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 34 பாரஞ்சும் ஒருகுடைக்கீழ் நீயே ஆளும் பதமடைந்தும் விதிவலியால் பயன்யெ றாமல் காரஞ்சு கரதலத்தாய்! அங்தோ, அந்தோ கடவுளர்தம் மாயையினால் கழிவுற் றாயே!”9 திருமாலின் தரிசனம் பெற்ற கன்னன் தேர்மேல் இருக் கின்றான். வையகத்து மன்னரெல்லாம் அவனைப் புடைசூழ இருக்கின்றனர். குருடன் மகன் அருகிருந்து சோகங் கூர் கின்றான். அன்று மாலைக்குள் கொடையான் மிக்கோன் இறந்து படுவதாக அசரீரி உரைக்கின்றது. இங்கிலையில் குந்தி தன் உளமுருகக் கண்ணிர் சோரக் குழல்சரியக் கோகோ வென்று ஓடிவந்து கன்னன்மீது விழுந்து அழுகின்றாள். மேற் காட்டிய பாடல் அவள் புலம்பலை எடுத்துரைப்பது. பாரஞ்சும் ஒரு குடைக்கீழ் நீயேயாளும் பதமடைந்தும் என்ற தொடர் கன்னனது உயர்ந்த குடிவழி நிலையைக் காட்டுகின்றது. அவன் பிறப்பு சரியான காலத்தில் ஏற்பட்டிருக்குமாயின் இந்த அவனி யெலாம் புரக்கும் அதிபனாக விளங்கி இருப்பான்; சிறந்த தம்பி யர்கள் யாவரும் (ஐவரும் நூற்றுவரும்) அவன் ஏவல் கேட்டு நிற்பர். விதி வலியால் பயன் பெறாமல்' என்ற தொடர் குந்தியின் ஊழ் உணர்ச்சியைக் காட்டுகின்றது; அஃது அவளது ஏக்கத்தையும் புலப்படுத்துகின்றது. இத்தொடரே இக் கவிதையின் தரத்தையும் பன்மடங்கு உயர்த்திவிடுகின்றது. படிப்போரின் கவிதையதுபவத்திற்கு ஒரு முத்தாய்ப்பு வைப்பதும் இத் தொடரே. இங்ங்ணம் கவிதை கூறும் உண்மை யும் கவிதையநுபவத்திற்குப் பெருந்துண்ை செய்கின்றது. புதுக்கவிதையின் தத்துவம் மேனாடுகளின் அண்மைக் காலத்து இலக்கிய வரலாற்றை நோக்கினால் கவிதை வடிவத்தில் யாப்பு வடிவம் ஆட்டம் கொண்டது தெளிவாகும். வளர்ந்து வரும் புதிய சமுதாயத்தின் சிந்தனை வளர்ச்சியின் வேகத்திற்கேற்பப் பழைய யாப்பு வடிவங்கள் இயைந்து கொடுக்க முடியாமல் தயங்கி சிற்பதைக் காண்கின்றோம். இந்த வடிவங்களைத் தகர்த்தெறியவும், 89. வில்லிபாரதப்-பதினேழாம் போர்ச்சரு. 258.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/43&oldid=812962" இலிருந்து மீள்விக்கப்பட்டது