பக்கம்:பாட்டுத் திறன்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமனிதத்துவ நோக்கில்... தனிமனிதத்துவம் என்பது தனிப்பட்டவரின் உரிமை பற் றிய ஒரு சமுதாயக் கொள்கை. இது இலக்கியக் கொள்கையா கவும் மலர்ந்துள்ளது. வாழ்க்கையில் தனிமனித உரிமை அல்லது தனிமனிதக் கோட்பாடு-தனி மனிதத்துவம்-என்பது மாற்ற முடியாத மனித இயல்பு ஆகும் என்பது சிலருடைய கருத்து. நடைமுறையில் மனிதக் கோட்பாடு என்பது தனி மனிதனுக்குச் சமுதாய நலத்தை அடிபணிய வைக்கும் சமுதாய எதிர்ப்புக் கொள்கையாகும். மனித வாழ்க்கையில் தனி உடைமைத் தோற் றத்தோடு கூடிப் பிறந்தது இக்கொள்கை. கடந்த இரண்டு உலகப்பெரும் போர்களின்போது பெருத்த அரசியல் மாற்றங்கள் ஐரோப்பிய காடுகளில் கிகழ்ந்தன. பல முடியரசுகள் கவிழ்ந்தன; இரஷ்ய நாட்டில் பெரும் புரட்சி கடந்து முடிந்தது. இந்தக் காலக் கட்டத்தில் போர் அழிவு உரு வாக்கிய மனநிலை முன்பின் அறியாததாக அமைந்தது. விரக்தி, ஏமாற்றம், கசப்புணர்வு, வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கை போன்ற உணர்வுகளால் ஐரோப்பிய மக்கள் அலைக்கழிக்கப் பெற்றனர். ஃபிராய்டு போன்ற உளவியலறிஞர் களின் கண்டு பிடிப்புகள், மனிதனின் அகவுலகச் செயல்கட்குக் கூறப் பெற்ற காரணங்கள் மக்களின் மனத்தைக் கவர்ந்தன.அறி வியலறிவும் இயந்திரங்களும் ஐயக்கண்ணுடன் கோக்கப் பெற்றன. இதன் விளைவாகப் பல்வேறு சிந்தனை இயக்கங்கள் ஐரோப்பாவில் முகிழ்த்தன; இவையே பின்னர் இலக்கியக் கொள்கைகளாக மலர்ந்தன. புலப் பாட்டுப் பாங்கியல் (Expre ssionism), படிமக் கோட்பாடு (imagism),ஃபிராய்டியக் கொள்கை (freudianism) t-Tu-Tu?g ở Ga;irairspa (Dadaism), tổ Gựiüthgọin jujá (Surrealism), 52.7%uropt- (stream of consciousness),