33 பாட்டுத் திறன் கவிதையில் புதிய வாக்கிய அமைப்பை (Syntax) ஏற்கச் செய் யவும் புது முயற்சியாளர்கள் முன் வந்தனர். மொழியைப் புது முறையில் செயற்படச் செய்தால்தான் வளர்ந்து வரும் கருத்துச் செல்வ வெளியீட்டிற்கு அஃது ஈடுகொடுக்க முடியும் என்றும் கம்பினர். இவர்கள் முயற்சியால்தான் வசன கவிதை, கட்டற்ற கவிதை வடிவங்கள் தோன்றலாயின. தமிழில் இத்தகைய வடிவங்கள் தோன்றுவதற்குப் பாரதியார் தான் வசன கவிதைகள்' என்ற தலைப்பில் பல கவிதைகளை வெளியிட்டு, இம்முயற்சிக்கு ஊக்கம் காட்டினார் என்று கருதலாம். கொளுச் சென்றவழி துன்னுாசி இனிது செல்லுமாப் போலே” இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற புதுக்கவிஞர்கள் புதுக்கவிதைகள் படைத்தனர். மேனாட்டுக் கவிஞர்களாகிய டி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட் போன்றவர்களின் படைப்புகளும் இவர்கட்கு ஒளி காட்டின. இதன் வளர்ச்சி, ஏற்றம், இறக்கம் முதலியவற்றை இந்நூலின் மூன்றாம் பகுதி விரிவாக விளக்குகின்றது. புதுக்கவிதையைப் பலர் வெறுக்கின்றனர்; தாற்றுகின்றனர். இது தவறு.புதுக்கவிதைத்துறையில் அதிகமாகச் செல்வாக்குடன் திகழ்பவர்கள் மரபுக்கவிதைகள் எழுதிப் புகழ்பெற்றவர்களே. இவர்கள் படைப்புகள்தாம் கிலைத்து வாழக்கூடியவை. குட்டுவதற்கோ பிள்ளைப் பாண்டியன் சங்கு இல்லை...' என்ற பாடலில் காட்டப் பெறும் எச்சரிக்கை இல்லாத தால் புற்றிசல் போல் எண்ணற்றவர்கள் புதுக் கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் முயற்சி பாராட்டத் தக்கதாயினும் இவர்களின் படைப்புகள் ஈசல் வாழ்வைத்தான்' பெறமுடியும் என்பதை இப்பகுதி கோடிட்டுக் காட்டுகின்றது, இறந்த புதுக்கவிதைகளும் படிப்போருக்குப் பாட்டதுபவம் தரும் என்றும் தெளிவாக்கப் பெற்றுள்ளது.
பக்கம்:பாட்டுத் திறன்.pdf/44
தோற்றம்