பக்கம்:பாட்டுத் திறன்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 43. அகவயக் கொள்கையின்மீது அமைந்தவை, ஃபிராய்டின் கொள்கையினர் இணைவிழைச்சு உணர்ச்சியின் படைப்பும் விளைவும் தான் கலையும் இலக்கியமும் என்று கருதுவர்." மீமெய்ம்மையியல் இதன்அடிப்படையில்தான் இணைவிழைச்சுத் துடிப்புகளும் வாழ்க்கையச்சம், இறப்பு அச்சம் ஆகியவைகளும் கலையின் உள்ளடக்கமாக இருத்தல வேண்டும் என்று இயம்பு கின்றது. இவர்கள் படைக்கும் கவிதைகளில் பயங்கரக் கனவுகள், 'உருவெளித்தோற்றங்கள் (Haluciations) பயங்கர மனோ விகாரங்கள் முதலியவை இலக்கியக் கருக்களாகத் திகழ்கின்றன. மேற்கூறிய கொள்கையின் அடிப்படையில்தான் கம் மொழி யிலும் பல புதுக் கவிதைகள் தோன்றியுள்ளன; தோன்றியும் வருகின்றன. தனிமனிதத்துவம் பாடும் கவிஞர்கட்கு மீமெய்ம் மையியல் என்ற் கொளகை சரியான பிடிப்பாக அமைந்தது. எதை வேண்டுமானாலும் தமக்குத் தோன்றியபடியெல்லாம பாடுவதற்கு இக்கொள்கை வழிகாட்டுகின்றது. இந்தப் பிரிவில் காணப் பெறும் கவிதைகள் சமுதாயத்தை ஒரு பார்வையாளன் போல் போக்கைக் கொண்டுள்ளன. மாக்டுகால் என்ற உளவியலறிஞர் மனிதனிடம் தோன்றும் உந்தலை (Drive) பதினான்கு எனக் கணக்கிட்டுப் பேசுவர். இவற்றுள் தலையாயவை இரண்டு. ஒன்று, தன்னைக் காத்துக் @greira jih gu&gësh (Instinct of self-preservation; @g பகயால் வெளிப்படும் உந்தல். மற்றொன்று, கால்வழியைக் sirisë Garsitesi Guảgësh Instinct of race-preser vation); இது காம உணர்ச்சி. பசியும் காமமும் மனிதனின் குடுமியைப் பிடித்து ஆட்டும் மாபெரும் ஆற்றல்களாகும். பசி பிறந்தநாள் தொட்டு இறுதிநாள் வரை இருந்து வருவது; காம உணர்ச்சி குமாரப்பருவத்தில் தோன்றி இறுதிவரை இருந்து வருவது. இவை இரண்டும் மனிதனைச் சமைக்கும் கித்திய கெருப்புகள். இவை இரண்டும் மனிதனுடைய அடுப்பாக மட்டு மின்றி விறகாகவும் இருந்து வருகின்றன. மனிதன் இவற்றில் பக்குவப் படுங்கால் இவற்றால் கருகி விடாமல் தன்னைக் காத்துக் கொள்வதில்தான் அவனுடைய வாழ்க்கைப் 4. சமணர்கள் இசையையும் நாடகத்தையும் அழித்த மைக்குக் காரணம் அவை காமத்தையும் உலகியல் இன்பங்களையும் தூண்டுகின்றன என்று கருதியதை "ஈண்டு நினைவுகூரலாம் :