பக்கம்:பாட்டுத் திறன்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 பாட்டுத் திறன் போராட்டம் அடங்கியுள்ளது. மனிதன் அவற்றில் இல்லை; அவற்றால் உருவாக்கப் படுபவனாக இருக்கின்றான். பசியைப் போக்க மனிதன் பல்வேறுதொழில்களில் இறங்கிப் பணம் சம்பாதிக்க வேண்டியுள்ளது. எண்ணற்ற தொழில்கள் பிச்சை எடுப்பதும் கொள்ளையடிப்பதும் ஏமாற்றுவதும் தரகு வேலை செய்வதும் போன்றவை கூடத் தொழில்களாக அமைக் திருப்பதை இன்றைய அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். கவிமணியின் கவிதையொன்றில் பிச்சைக்காரன் வாய்மொழி யாகப் பிழைக்கும் தொழில்கள் காட்டப் பெறுகின்றன; அவை கும்பி செயும் செயல்கட்காகவே என்று காட்டப் பெறுகின்றது. கோர்ட்டிலே ஜட்ஜி இருப்பதுவும்-வக்கீல் கொட்டி முழக்கி கின் நாடுவதும் கூட்டிலே கள்ளன் கடுங்குவதும்-இந்தக் கும்பி செயும் செயல் அல்லவோடா லட்சமும் கோடியும் வேண்டாமடா-அதை ரட்சிக்க கம்மாலே யாகுமோடா அட்சய பாத்திரம் உண்டேயடா-கமக்(கு) ஆரே நிகரில் வுலகிலடா." திேபதித் தொழில், வக்கீல் தொழில், திடுட்டுத் தொழில், ஏன்? பிச்சைக்காரத் தொழிலும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே. பசிப்பிணியை நீக்குவதற்காகத்தானே-மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தெள்ளத் தெளிந்த கடையில் எடுத்துக்காட்டு கின்றார் கவிமணி.

ராப்பிச்சைக்காரன்' என்ற அபி'யின் ஒரு கவிதையில் காமம் என்ற பாலுணர்ச்சி ராப்பிச்சைக்காரன்' என்ற குறியீடாக அமைகின்றது. கவிதையில் ராப்பிச்சைக்காரனைப் பற்றிப் பேசுவதெல்லாம் காம உணர்ச்சியைப்பற்றிப் பேசுவதே யாகும். ராப்பிச்சைக்காரன் சரியான புறவயத் தொடர்பாக (objective correlative) soupság -jūjøføðáš Q&tiuţth காமத்தை அதன் முழுவிகாரங்களுடன் காட்டும் ஓர் ஆளாக அமைந்து விடு கின்றான். இனிக்கவிதையைக் காணபோம். இரவு வந்ததும் காமஉணர்வுகளுக்கு ஆளாகித் தன்னை அழித்துக் கொண்ட

5. பிச்சைக்காரர் கோம்மானம் ?,$1. 8. மெளனத்தின் தாவுகள் பக்.24.