பக்கம்:பாட்டுத் திறன்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 பாட்டுத் திறன் ஆனால்...ஆனால்...எனக்கோ? ராப்பிச்சைக் காரனே, உன்மேல் ஏற்பட்ட அலுப்பு: ஆம். உன்னைச் சகிக்கமுடியவில்லை இனிமேல் என் வாசலின் கோலங்களை உன் சுவடுகளால் கிழிக்காதே யோபோ போய்விடு போய்விடு. இவ்வாறு காம உணர்வுக்கு ஆளாகி அலுத்துச் சலித்த ஒருவனைக் கவிஞர் தாமாகக் கொண்டு அக்காமப் டேயைத் துரத்தி அடிப்பதாக அமைந்துள்ளது அபி'யின் அற்புதமான இந்தக் கவிதை. இன்றைய உளவியலறிவு மனிதனின் ஆழ்மனத்தை அவனுக் குத் தோலுரித்துக் காட்டிவிட்டது. பாலுணர்வு என்பது ஆபா மல்ல என்பதையும், அது குழந்தையிடமே தோன்றி விடுகின்றது என்பதையும் இன்றைய மனிதன் அறிந்து கொள்ளுகின்றான். காமம் என்ற உணர்வை உளவியல் அடிப்படையில் புரிந்து கொள்ளுகின்றான். மதனவேள், காமன், உருவிலாளன், அகங்கன் என்றெல்லாம் வழிவழியாக வருணிக் கப்பெறும் காமத்தை ராப்பிச்சைக் காரனாக-பகல் பிச்சைக் காரனாக அல்ல (காமம் விசுவரூபம் எடுப்பது இரவில்தான்)குறியீடு செய்திருப்பது அற்புதம் அற்புதம்!! பாலுணர்வு தான் காதல் என்ற டாக்டர் ஜெக்கில் (Dr lekyli) ஆகவும் இருக்கின் றது; காமம்' என்ற மிஸ்டர் ஹைடு(Mr.Hyde)ஆகவும் கோலம் கொள்ளுகின்றது என்பதைப் புரிந்துகொண்டு இன்றைய புதுக் கவிஞன் பிரச்சினையை அணுகுகின்றான் என்பதை நாம் சிக் தித்து உணர்தல் வேண்டும். அவனுக்குத்தான் காமத்தை ஒர் "இராப் பீச்சைக் காரனாகக்'கருதித் துரத்தியடிக்க முடிகின்றது. இன்றைய வாழ்க்கையில் பாலுணர்ச்சி பள்ளியறையை விட் டுத் தெருவிற்கு வந்து விட்டது. சினிமாவில், காட்டியத்தில், பேருந்தில்,கடற்கரையில்,அலுவலகத்தில் பாலுந்தல் மனிதனின் குடுமியைப் பிடித்துஆட்டுகின்றது. பாலுணர்வு வேட்கையை இறக்கிவைக்கும் இயந்திரங்களாக மனிதனின் புற உலக இயக்கம் நிகழ்கின்றது. இந்த முதன்மை புணர்ச்சியே ஃபிராய்டின் கொள்