பக்கம்:பாட்டுத் திறன்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 பாட்டுத் திறன் மலர்ச்சி போன்ற பல்வேறு உணர்வுகளையும் இன்ற்ைய புதுக் கவிஞர்கள் தம் கவிதைகளில் வெளிப் படுத்துவதைக் காணலாம். இங்கனம் தனி மனிதத்துவத்திற்குக் கை கொடுத்து உதவியவர் கள் எஸ்ரா பவுண்டு, டி.எஸ் எலியட்டு ஆகியோர், இவர்களையே இக் கவிஞர்கள் வழிகாட்டிகளாக ஏற்கின்றனர்.எஸ்ரா பவுண்டு பல பரிமாணங்களோடு கூடிய ஒரு கலையே கவிதையாகும் என்று கருதினார். இந்த விளக்கம் உள்மனத்தின் ஆழத்தில் பயணம் செய்யும் அதன் துண்மையைக் குறிப்பதாகும் என்று புதுக் கவிஞர்கள் கொண்டனர். எனவே, ஃபிராய்டின் கொள்கை, இருப்பியல் கொள்கை, மீ மெய்ம்மையியல் என்பன போன்ற கோட்பாடுகள் இவர்கள் கவிதைகளில் இடம் பெறலாயின. இயலாமையையும் விரக்தியையும் அவநம்பிக் கையையும் புதுக் கவிஞர்கள் வெளிப் படுத்தலாகாது என்று சிலர் கருதுகின்றனர். இவ்வாறு எழுதப் பெறும் கவிதை கள் மிகவும் பிற்போக்கானவை என்றும் கருதுகின்றனர். இக் கருத்து முற்றிலும் ஒப்புக்கொள்ள இயலாத தொன்று. தனிமனி தத்துவ உணர்வுகளின்றி வாழ்க்கை இல்லை. அவரும்பிக்கைதான் கம்பிக்கைக்கு மனிதனை நடத்திச் செல்லுகின்றது. ஆற்றாமையி விருந்துதான் புதிய ஆற்றல் ஊற்றுகள் தோன்றுகின்றன.எனவே தனிமனிதத்துவ அடிப்படையில் வெளிப்படுத்தப் பெறும் இன் றைய உணர்வு ஒவ்வாதது என்று நாம் புறக்கணிக்க இயலாது. எல்லாவற்றையும் சமதர்ம மெய்ம்மையியலின் கீழ்க் (sociolistic realism) கொண்டு வருவதென்பது இயலாததொன்று. கவிஞனின் சிந்தனை என்பது வெறும் கருதுகோள் (Hypo thesis) அன்று. அஃது உணர்வுகளுடன் உறவுடையது. படிப் போர் மனத்தின் எழுச்சிக்கேற்பக் கவிதையின் உட்பொருள் உணரப்படுகின்றது. இன்றைய கவிதை என்பது இன்றைய சரா சரி மனிதனைப் பற்றிய கவிதை, அறிஞன், இயந்திர மனிதன். சீற்ற முள்ளவன், சாந்தமானவன், அகமுக மனிதன், புறமுக மனிதன் என்றெல்லாம் மனிதர்கள் வேறுபடினும் மனிதன் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப அவன் பிறருடன் ஒன்றுபடுகின் றான். இந்த நிலைப்புள்ளியில் கவிஞனும் கின்று கொண்டிருப்ப தால் அவன் பிறருடைய அநுபவங்களை அறியவும், அறிந்த வற்றை அசை போடவும், அவற்றை உணரவும், தெளியவும் தகுதி பெற்றவனாகின்றான். இத்தகுதியினால் அவனுள் ஒளி 8. புதுக்கவிதை முற்போக்கும் 86. في بي - قهونغ يده في 3د