பக்கம்:பாட்டுத் திறன்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 பாட்டுத் திறன் இன்று வெளிவந்துள்ள-வந்துகொண்டிருக்கின்ற-பெரும் பான்மையான புதுக்கவிதைகள் நடுத்தரவகுப்பைச் சார்ந்த நகர மக்களின் சிறிய உலகத்தை நுணுக்கமாகப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்துள்ளன. கவிதைக்கு மென்மையான பாடுபொருளும், தன்னேரில்லாத் தலைவர்களும் வேண்டும் என்ற கொள்கை இன்றைய புதுக்கவிஞர்களிடம் செல்லாக் காசாகிவிட்டது. இன்றைய சராசரி மனிதனின் வாழ்க்கையில் எழும் உணர்வுகளைத்தான் புதுக்கவிதைப் படைப்பில் காண் கின்றோம். நடுத்தர வகுப்பினர் காதல், வேலை வாய்ப்பு, வறுமை, வரதட்சிணை, விலைவாசி உயர்வு, சம்பள உயர்வு, கையூட்டு ஊழல், அதிகாரிகளின் அடாத செயல்கள், அதிகார வர்க்கத்தினரின் அக்கிரமங்கள் என்பன போன்ற பிரச்சினை களைச் சந்திக்க நேர்கின்றன. இந்தச் சூழ்நிலைகளில் அவர்கட்கு நேரும் உணர்வு அதுபவங்கள் இன்றைய புதுக்கவிதைகளில் வெளியிடப் பெறுகின்றன. கவிஞன் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குகின்றான். வாழ்க் கையில் மாற்றங்களும் பரவலாக உள்ளன; இதனால் அஃது எளிமையானதாக அமையவில்லை. வாழ்க்கைச் சிக்கலைப்புரிந்து கொள்வதும் அருமையாக உள்ளது. சிக்கலான இந்த வாழ்க் கையைப் புரிந்துகொள்வதற்கு இன்றைய கவிஞன் முந்தைய கவிஞர்களைவிட அதிகமாகச் சிரமப்படவேண்டியதாக உள்ளது. அதிக உழைப்பும் ஆழ்ந்து சிந்திக்கும் போக்கும், நுட்பமான உணர்வும் தேவைப்படுகின்றன. இன்றைய அறிவியல் தொழில் நுட்பயுகத்தில் கவிஞனுக்குக்கிடைக்கும் புத்துறைஅறிவும்வாழ்க் கையைத் தீவிரமாக உணரக் கவிஞனுக்குக் கைகொடுத்து உதவு கின்றது. நமக்கு முன் உள்ள உலகு இயந்திர உலகாக, அறிவியல் உலகாக நாளும் விரியும் பரந்த அகிலமாக இருப்பதால் இதற்கிணையான புதிய அகத்தெழுச்சியைக் கவிஞன் பெறுகின் றான். முந்தையதலைமுறை அறியாத அரிய உணர்வு கிலைகளைக் கவிஞன்சந்திக்கின்றான். இதன்விளைவு கவிஞனின் அநுபவங்கள் இன்றைய அறிவுசார்ந்த அநுபவங்களாக வெளிப்படுகின்றன. இங்ங்னம் மேலும் மேலும் ஒவ்வொரு வாழ்க்கைக் கூறிலும் அறிவு ஒளி விழவிழ, அது கம் உணர்வை ஆழப்படுத்து கின்றது. இந்த ஆழத்தில்தான் இறங்கவும், அநுபவித்து எழவும், படிப்போரை இறங்கச் செய்யவும், அதுபவிக்கச் செய்யவும் கவிஞன் தீவிரமான ஈடுபாட்டுடன் இயங்கவேண்டி