பக்கம்:பாட்டுத் திறன்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-26 நகைச்சுவை கிண்டல் எள்ளல் இன்று பல்வேறு புதுக்கவிதைத் தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. எல்லாத் தொகுப்புகளுமே சிறந்தகவிதைகளைக் கொண்டுள்ளன என்று சொல்வதற்கில்லை. என்றாலும், தரமான கவிதைகள் கிறைய உள்ளன. இவற்றினுள் நகைச் சுவையை விளைவிக்கும் கவிதைகள், கிண்டல் கேலி எள்ளல் (அங்கதக்), குறிப்புள்ளவை ஊசிபோல் குத்திக் காட்டும கவிதைகள் காணப் பெறுகின்றன. இவற்றுள் சில வற்றை இந்த இயலில் காணலாம்; படித்து மகிழலாம்; பரவசப் படலாம். புதிய பாணியில் படைக்கப் பெற்ற சில மரபுக் கவிதை களும் இங்கு இடம் பிடித்துக் கொண்டன. நகைச்சுவை விளைவிப்பவை: 'அரிசியல்' என்ற தலைப் பில் காணப்பெறும் ஒருகவிதை: எம்பிக் குதித்து முறத்தில் விழுந்து முதுகு தேய்க்குது அரிசிமா மணிகள். காற்றின் சூழ்ச்சியால் கணக்காய் மெதுவாய் கல்லை கெல்லை எடையாய்ப் பிரித்து தரைமேல் உருட்டுது தந்திரக் கரங்கள் ஆகும் முறமும் ஓர் அரசியல் பூமியோ?

  1. - உதயநிழல்-பக் 13,