பக்கம்:பாட்டுத் திறன்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 பாட்டுத் திறன் சொட்டு சொட்டாய்க் கண்ணிர் வடிக்கும் காதலி... காகிதக் குழந்தையை முத்தமிடும் கேரத்தில் மட்டுமேதன் முகத்திரையை நீக்கி முறுவலிக்கும் தாய்...... என்னுடையஇன்னொரு கை என் பேனா! ஒரு ஜடப் பொருள் என்பேனோ? பேனாவை விளக்கும் குறியீடுகள் அடுக்கடுக்காய் அமைந்து நம்மைமகிழ்விக்கின்றன. என் பேனா-என்-பேனா? என்ற சொற்கள் சேர்ந்தும் பிரிந்தும் இருந்து கோண்டு நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இவற்றில் உள்ள சக்தி சிரிக்கவைக்கின்றது! "வருத்தம்' என்ற தலைப்பில் ஒரு கவிதை. இவர்களை மொட்டையடித் மொட்டையடித்தே காம் மிகவும் இளைத்துப் போய் விட்டோம் என வருத்தப் பட்டன திருப்பதியில் சவரக் கத்திகள்! நல்ல நகைச்சுவை தரும் கவிதை. சில்லறை வியாபாரிகள் குறுக்குவழியில் தரிசனம் செய்துவைப்பவர்கள், தரகர் கூட்டம் இவர்கள் பக்தர்களையும் திருத்தலப் பயணிகளையும் மொட்டை அடித்தலால்' அவர்கள் பணப்பை பரிதவித்து அழுகின்றன 8, பூத்த வெள்ளி-பக்.27