பக்கம்:பாட்டுத் திறன்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-21 சில இலக்கியக்கொள்கைகளின் அடிப்படையில் மேனாடுகளில் கருத்து வளர்ச்சியின் வேகத்தில் சில இயக் கங்கள் இலக்கியக் கொள்கைகளாக மலர்ந்தன. அவை மேனாட்டு இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இவற்றின் அடிப்படையில் எஸ்ராபவுண்டு, டி. எஸ். எலியட்டு, வால்ட் விட்மென், எட்வர்ட் கார்ப் பெண்டர் போன்ற அம்ெரிக்க, ஐரோப்பிய, ஆங்கிலக் கவிஞர்களும் மாயாகோவ்ஸ்கி போன்ற இரஷ்யக் கவிஞர்களும் தம் கவிதைகளை அமைத்தனர். இவர் களைப் பின்பற்றி கம் காட்டுப் புதுக்கவிஞர்களும் தம் கவிதை களைக் கொள்கைக் கனத்துடனும் கருத்துவளத்துடனும் படைத்து வருகின்றனர். இங்ங்ணம் படைக்கப்பெறும் கவிதை அமையும் தத்துவப் பின்னணி, கொள்கைகளின் அடிப்படை இந்த இயலில் எடுத்துக்காட்டப் பெறுகின்றன. நான்கு கொள்கைகளின் அடிப்படையில் மட்டிலும் காட்டப் பெறுகின்றன.' படிமக் கோட்பாடு : இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத் தில் (1906-1917) குறியீட்டியல் கவிஞர்களின் செல்வாக்கில் ஆங்கில-அமெரிக்கக் கவிஞர்களைக் கொண்ட ஒருகுழுவினரால் உருவாக்கப் பெற்றது இக்கோட்பாடு. தமிழில் வளர்ந்து வரும் புதுக் கவிதையின் உயிரே இந்தப் படிம உத்தியில் அடங்கி யிருப்பதைக் காணலாம். அறிவாலும் உணர்ச்சியாலும் ஆன ஒரு மனப்பாவனையை ஒரு கொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம் என்பது' என்று படிமத்தைப் பற்றிய எஸ்ராபவுண்டின் கூற்று. ஓர் ஓவியமோ சிற்பமோ தன்னைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்திக் கொள்கின்ற ஒருவித 1. வினை விளக்கம் வேண்டுவோர் இந்த ஆகையகன்புதுக்கவிதைபோக்கும் நோக்கும் (பாtநிலையம், பிரகாசம் சாலை, சென்னை-600108} என்ற துலைக் காண்க