பக்கம்:பாட்டுத் திறன்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 பாட்டுத் திறன் கவிதையே படிமம் ஆகும் என்பது மேலும் அவர் படிமத் திற்குத் தரும் விளக்கம் ஆகும். ஒவியம் சிற்பம் நம் புலன் உணர்வுகளை ஈர்த்து உணர்ச்சி களை கம்மீது ஏற்றிவிடுகின்றன. படிமங்கள் இவ்வுணர்ச்சி கட்குப் பொருள் தேடும் பணியை ம்ே அறிவு நிகழ்த்துகின்றது. இஃது ஒவிய அநுபவமாகும்; சிற்ப அநுபவமும் இத் தன்மைத்தே. இவை போன்ற ஒருவித அதுபவத்தைப் படி மமும் செய்து காட்ட முனைகின்றது. பண்டைய கவிதைகளில்,-ஏன் இன்றைய கவிதைகளில் கூட- உவமை யும் உருவகமும் கவிதைக்கு இறுக்கத்தையும் செறிவையும் ஈந்துக் கவிதையின் பொருளுக்கு ஒரு பொலிவைக் தருகின்றது என்பதை நாம் அறிவோம். படிமங்கள் பொருளுக்கு மேலும் மேலும் ஒளியேற்றுகின்றன. அழகின் உச்சியைப் படிமம் என்று கூடச் சொல்லி வைக்கலாம். சிறந்த கவிஞர்கட்கு இஃது காகுத்தன்; கை வில்போலவும் இலங்கை வேந்தனின் யாழ் போலவும் சொன்னபடியெல்லாம் ஏவல் கேட்டு கிற்கும். இதனை இவர்கள் வற்புறுத்தி-பலவந்தப் படுத்தி-வேலை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. படிமத்திற்குச் சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம். (1) ஒற்றை மரணமும் ஓராயிரம் வாழ்க்கையும்" என்ற கவிதையில் புகழ் பற்றி வரும் பகுதி இது. வெறுத்தால் விரும்பும் விரும்பினால் வெறுக்கும்-இந்த அதிசயக் காதலியின் சுயம்வர மண்டபத்தில் நகல் களன்களின் நெரிசலே அதிகம்-அதனால் அசல் களனுக்கே ஆபத்து ஏற்படும்-ஆனால் மாலை விழுவதில் மாற்றம் கிடையாது. ,ே தீவுகள் கரையேறுகின்றன-பக். 66-67