பக்கம்:பாட்டுத் திறன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 35 செயற்படத் துரண்டுகின்றன; உடம்பின் தசைநார்களை இயக்குகின்றன. இதனால் ஆற்றில் குதிப்பவனைத் தடுக்க முனைகின்றோம்; அல்லது அபயக் குரல் எழுப்புகின்றோம். கற்பனையில் தோன்றும் உணர்ச்சிகள் செயற்படத் துாண்டு வதில்லை; தசைநார்களையும் இயக்குவதில்லை. இதனால்தான் திரைப்படத்தில் ஒருவன் ஆற்றில் குதித்து அல்லது இரயிலின் அடியில் தலையைக்கொடுத்துத் தற்கொலை செய்து கொள் வதைக் காண நேரிடுங்கால் நாம் இருந்த இடத்தைவிட்டு அசையாது அக்காட்சியைக் காண்கின்றோம். ஆனால் நெஞ்சில் மட்டிலும் துணுக்கென்று ஒர் உணர்ச்சி ஏற்படுகின்றது. எனவே, கவிதையதுபவத்தை அறிய விரும்பும் நாம் முதலாவதாக உணர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் வேண்டும் என்றாகின்றது. நம்முடைய உடலில் உணர்ச்சிகள் தோன்றுங்கால் சில உள்ளுறுப்புகளில் சில மாறுபாடுகள் நிகழ் கின்றன. உடலும் உள்ளமும் கன்னிலையில் இருக்கும்போது பெறும் உணர்ச்சிகட்கும் ஏதோ ஒன்று கெட்டிருந்தாலும் அப்போழுது ஏற்படும் உணர்சசிகட்கும் வேறுபாடுகள் உள. உடல் நிலை உள்ள நிலையையும்,உள்ள கிலை உடல் நிலையை யும் பாதிக்கும் என்பது காம் அறியும் அநுபவம். ஆகவே, நாம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவினை முதலில் ஆராய் வோம். உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவு: உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவு பற்றிய பிரச்சினை நீண்ட கால மாகவே இருந்துவருவது. எனினும்,அனைவரும் ஒப்புக்கொள்ளத் தக்க முறையில், அறிவியல் அடிப்படையில், இப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்பெறவில்லை. உடல் வேறு, உள்ளம் வேறு என்று சாதர்ரண மக்கள் எண்ணினாலும், இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை எவரும் மறுக்க முடி யாது. இந்த உறவினை கன்கு அறிந்த திருமூலர், உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்; உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்; உ.ம்புளே உத்தமன் கோயில் கொண் டான்ன்ன்று உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/47&oldid=813052" இலிருந்து மீள்விக்கப்பட்டது