பக்கம்:பாட்டுத் திறன்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 4 f5 இவர்களைப் பாரதியார் வீரமிலா நாய்கள்' என்றும், கெட்டை மரங்கள் என்றும் சாடுகின்றார். இவர்தம் பெட்டைப் புலம்பல் பிறர்ககுத் துணையாமோ?' என்றும் கேட்கின்றார். எந்த அபாயத்திலும் சிக்கிக் கொள்ள விரும்பாத பேடித் தனமான இரக்க உணர்வு மனிதாபிமானம் ஆகாது என்பது கார்க்கியின் அதிராக் கருத்தாகும்; அதை ஒரு பொய்வேடம் என்பதைத் தெளிவாக்குவர் அப்பெருமகனார். தனிமனிதத்துவத்தின் அடிப் படையாக வெளிப்படும் இரக்க உணர்வு- மனிதநேசம்செயலுக்குத் துரண்டாத சோனி இரக்கமாகும். இந்த உணர்வால் பயன் இல்லை என்பது மார்க்சியச் சிக்தனையாளர் களின் கருத்தாகும். மார்க்சியப் போக்கும், சமூக அறிவியல் கண்ணோடடமும், எல்லாமக்களும் ஒரு புதுவாழ்வைப் பெற வேண்டும் என்ற குறிக் கோளும் கொண்ட் இளைஞர்கள் பலர் வளர்ச்சிபெற்று வரும் புதுக் கவிதையையும் ஓர் ஆயுதமாகக் கொள்ள வேண்டும் என்ற பேரவாக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். குறிக்கோள் வேகமும், கொள்கைப் பற்றும், சமூகத்தை மார்க்சிய அடிப் படையில் சீரமைக்கும் கடமை யுணர்வும் கொண்ட இளங்தலை முறைக்கவிஞர்களில் பலர் உற்சாகமாகப் புதுக் கவிதைகளைப் படைத்து வருகின்றனர். இக்கவிதைகளில் தொழிலாளர்கள் உழைப்பாளர்கள் இவர்கட்குச் சொல்ல வேண்டிய செய்தி தெளிவாகப் பிசிரற்றுச் சொல்லப் பெறுகின்றது. முதலாளித்துவ சமுகத்தின் உற்பத்திச் சாதனங்களின் அதிவேகமான மாறுதலில் பழஞ் சமூக உறவுகள் மாறுவது போலவே பழஞ்சமூகத்தின் சிந்தனைகள், கொள்கைகள், இலக்கிய வடிவங்கள், இலக்கிய உத்திகள் போன்றனவும் மாறுபடும், மாறுபடவேண்டும் என்பது இவர்தம் கொள்கையாகும். எனவே, கவிதைகளும் இந்த அடிப் படையில் தோன்றுவது இயல்பேயாகும். இக்கொள்கையின் அடிப்படையில் தோன்றிய ஒரு சில கவிதைகளை ஈண்டுக் காண்போம்.

  • ** 常

கங்கையும் காவேரியும்” என்ற ஒரு கவிதையில், உழைப்பவர்க்கே வாழ்வென்று உங்கள் தலைமுறை எழுதுகின்ற சாசனத்தை எடுத்து வந்து காட்டுங்கள்! 1. :வுகள் கரையேறுகின்றன பக். க்ே