பக்கம்:பாட்டுத் திறன்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 463 இதில் தீபம், இசைத்தட்டு, சிலவு-இவை கண்ணதாசனுக்குக் குறியீடு, நட்சத்திரங்கள் நடிகையருக்குக் குறியீடு. குறியீடுகள் கருத்தை அற்புதமாகத் தெரிவிப்பதைக் கண்டு மகிழலாம். மீமெய்ம்மையியல் : முதலாம் உலகப் பெரும்போர்க் காலக் தில் தோன்றித தெளிவற்ற சொற்களில் விளக்கப் பெற்று வந்த டாடாயிசத்தையும் (Dadaism), கலை என்பது காமவிகாரங் களின் படைப்பாகவும் செயற்பாடாகவும் இருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற ஃபிராய்டின் மூலதத்துவத்தை யும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியக் கொள்கை யாகும் இது. காமக்கிளர்ச்சிகளையும் சாவையும் வாழ்வையும் பற்றிய அருவருப்பான இயல்புணர்வுகளையும் படிம, குறியீட்டு உத்திகளின் மூலம் வடித்தெடுத்துக் கொடுப்பதே இக்கொள்கை யின் அடிப்படையில் எழுந்த இலக்கியத்தின் உள்ளடக்கமாகும். தன்னிச்சையான செயல், காரணகாரியத்தொடர்பு வேண்டாத, கட்டுப்பாடற்ற மிகுகற்பனைகள் மன உறவுகள் ஆகியவற்றை இருப்பதைக் காட்டிலும் மேலானவையாக இக்கொள்கையினரால் கருதப் பெறும் ஒருபோலியான மெய்ம்மைநிலையை இவ்வகை இலக்கியங்கள் விவரித்துக் காட்டுகின்றன. நடைமுறை வாழ்க்கையைத் திட்டமிட்டு மிகைப்படுத்திக் காட்டுவது இவ் வகை இலக்கியங்களின் போக்காக அமைகின்றது." சி. மணியின் பச்சையம்', 'வரும் போகும்', கரகம் என்ற கவிதைகளை இக்கொள்கையினை விளக்குவனவாகக் கருதலாம். 'பாலுணர்ச்சி கூட்டிப் பச்சையாக எழுதுகின்றார் கவிஞர் என்று சிலர்கூறும் குற்றச் சாட்டுக்குக் கவிஞர் (சி.மணி) கூறும் எதிர்ப்புதான் பசசையம்' என்ற கவிதை. அவருடைய சீற்றம் உணர்ச்சி வேகத்துடன் உருவம் பெறுகின்றது.பாலுணர்ச்சியைப் பச்சையாக எழுத்தில் படைக்கக் கூடாது என்று குற்றப் பத்திரிகை வாசிப்பவர் யாவர் என்ற வினாவிற்கு விடைதரும் பாங்கில் கவிதையின் முற்பகுதி அமைகின்றது. வாலை இளநீரை வாய்வழியால் வாரிப் பருகும் இவர்கள் இளமை கொடுக்கும் துணிவில் இடித்துக் களிக்கும் இவர்கள் 14. மேலும் விவரங்களை இவ்வசசிரியரின் புதுக்கவிதை.பேர்க்கும் நோக்கும் (பாரி நிலையம், சென்னை-108)-பக்(428.480) காண்க. 15. வரும்போகும்'-என்ற தொகுப்பில் காண்க.