பக்கம்:பாட்டுத் திறன்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 469 வண்டி) பொய்த்துப் பொய்த்து மேசைமேல் கோப்புகளெனக் குவிக்கின்றது, கும்பலை. இடம்பிடித்துத் தருகின்ற வலிமையும் கயமையும் இல்லாமல் கிற்கின்ற கவிதை நாயகன் வெளியில்ே உருப்பெற்ற ஆசையுலா கண்டு பொழுது போக்க வேண்டிய தாயிற்று. இவன்மனம் குறுகுறுக்கின்றது; பேசுகின்றான் : யார் சொன்னார் இந்தியா பிற்பட்ட காடென்று? முத்தர வகுப்பென்று? பிற்போக்கு நைலான் உடுத்துமோ? இங்கே இப்போது தெரிவதெல்லாம் முற்போக்கு, அறிவதெல்லாம் மேல்தரம், வறுமையேது, இங்கே இருப்பதெல்லாம் பெருமைதான், இன்பங்தான், சிலோன் சீனா பாகிஸ்தான் எதுவுமில்லை; இருப்பவை மவுண்ட்ரோடு வாய்ப்பேச்சு விழி வாள் வீச்சு பற்சர மின்னல் ககை ஜலதரங்கம் தேர்வு இடிப்பு இளிப்பு இளமையின் இயல்பு. இரைச்சலுடன் பேருந்துகள் வந்துபோகும் இடத்தில் காலம் ஒடக் காத்து கிற்கும் வசதியற்றவனின் மனம் பெரிய இடங்களின் இளைஞர்களும் இளவஞ்சியர்களும் பயில்கின்ற நடுத்தெரு நாகரிகத்தை மேலும் மேலும் கண்டு சிலிர்க்கின்றது. எப்பொழுதோ ஒரு கோப்பைக் காஃபி வயிற்றில் கரைந்து போன உணர்வு தலைகாட்டுகின்றது. கண்முன்னாலோ பசிக்காமல் உண்ணமுடியாமல் திணித்து முடித்துவிட்டு நீட்டிய தட்டில் எறிந்தபடி -பிளேயர்ஸ் ஒன் பேக்கெட், ஒ கீப் தி சேஞ்ஜ் வெயிட்டர் ஒயிலாகச் சிகரெட் பற்றவைத்துச் சுருள் சுருளாய்ப் புகைகிளப்பித் தவளைக்குப் பாம்பின் வாய்விரிப்பாய் அவள் வியப்பின் விழிவிரிப்பைக் கடைக்கண்ணில் களித்து