பக்கம்:பாட்டுத் திறன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& பாட்டுத் திறன் உடம்பார் அழிவில் உயிரார் அழிவர்; திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்; டம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே ? என்று கூறியிருப்பது காம் நன்கு சிந்தித்தற்குரியது. உடல் உள்ளத்தைப் பாதிக்கின்றது; அங்ங்ணமே உள்ளமும் உடலைப் பாதிக்கின்றது. இதையே இன்னொருவிதமாகக் கூறினால் ஒருவருடைய ஆளுமையில் உடற்கூறும் உண்டு; உளக் கூறும் உண்டு. உடற்செயல்களும் உள்ளச் செயல்களும் ஒன்றோடொன்று உறவுகொண்டுள்ளன. இவ்வுறவு உள்ளத் திற்கும் உடலின் பகுதியாகிய நடு நரம்புமண்டலற்திற்கும், ! உடலிலுள்ள சுரப்பிகளுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவு. இதனைப் பின்னர் விளக்குவோம். உடல் உள்ளத்தைப் பல வழிகளில் பாதிக்கின்றது. மூளை யின் அளவிற்கேற்பவும் அதன் அமைப்பிற்கேற்பவும் ஒருவருடைய அறிதிறன் அமைகின்றது. எனவே, அறிதிறனின் உள்ளார்ந்த இயல்பு பிறவியிலேயே அமைந்துவிடுகின்றது; இதை மாற்றவோ அதிகரிக்கச் செய்யவோ இயலாது. அறிதிறன் மூலை யிலுள்ள மடிப்புகளுக் கேற்றவாறு அமைக்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர். ஆளுமை வளர்ச்சியில் அறிதிறன் பெரும் பங்கு கொள்ளுகின்றது. மேலும். உடற்குறைகளும் (குருடு, செவிடு போன்றவை) ஆளுமையைப் பாதிக்கின்றன. ஹெலென் கெலெர் என்ற பெருமாட்டி இதற்கு விதிவிலக்காகலாம்; அனை வரும் அவ்வாறிலர் என்பதை காம் அறிதல் வேண்டும். இந்தக் குறைபாடுகளால் பலரது வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருந்து வருகின்றது என்பது தெளிவு. இயற்கையான உயரத்தை விடக் குறைந்திருந்தால்கூடி வாழ்க்கையில் ஒருவர் கொண்டுள்ள மனப்பான்மை மாறுகின்றது. சிறப்பாக மகளிரிடம் உடல்வனப்பு அவர்களின் ஆளுமை வளச்சியைப் பெரிதும் பாதிக்கின்றது என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணலாம். மெல்லிய 2. திருமந்திரம் - 705,704 3. *ss sou · Personality. 4. & Goriču insol-wis - Central nervous system. $. * s úš #óir • Glands. 6. tonų ire; sår - Convolutions. - 7. Gşın Gersir GaGavir - Helen Kciler.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/48&oldid=813074" இலிருந்து மீள்விக்கப்பட்டது