பக்கம்:பாட்டுத் திறன்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4፳፩ - பாட்டுத் திறன் காரண காரிய இயைபுப் பொருத்தமின்றி வெளிப்படுத்துவது தான் இவ்வுத்தியின் போக்காகும். 1887-ஆம் ஆண்டு டுஜார்டின் (Diliardin) என்பவரால் படைக்கப் பெற்ற புதினமொன்றில் முதன்முதலாக இவ்வுத்தி பயன்படுத்தப் பெற்றதாக அறிகின்றோம். வில்லியம் ஜேம்ஸ் (1843-1910) என்பவர் ஒரு கதைமாந்தரின் அடிமன எண்ணங் களை அன்றாடவாழ்க்கையில் ஏற்படும் வெறும் தற்செயல் நிகழ்ச்சிப் போக்கில் முன்வைக்கும் முயற்சியில் எழுதிய உள sĩa ở Gstitutr@æsir."( Princ iplesof Psychology; gr&syth நூலில் இச் சொல்லை உருவாக்கியதாக அறியக் கிடக்கின்றது. மேல் காட்டில் ஜேம்ஸ் ஜாய்ஸ் (1883-1914), வெர்ஜீனியா வுல்ஃப் (1882-1941), டோரதிரிகார்ட்சன், வில்லியம் பாக்னர் போன்றவர்கள் இம் முறையில் தம் படைப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளனர். எண்ணங்களும் உணர்வுகளும் மடை திறந்த வெளிப்பாடாகவும், முடிவின்றித் தொடர்கின்ற தனி மொழியாகவும், குறிப்பிட்ட கதைமாந்தரின் மனக்கண் வழியே காண்கின்ற காட்சியாகவும் அமைகின்ற உத்திக்கு கனவோடை என்று பெயரிட்டு வழங்கினர். தமிழ்ப் புதினங்களில் புதுமைப் பித்தனின் காஞ்சனையின் கனவு', 'கயிற்றரவு'; லேடத்ம காபனின் பள்ளி கொண்டபுரம்', உறவுகள்'; பிச்சமூர்த்தியின் படைப்புகளில் சில சிறு கதைகள்; லா.சா. ராமார்ேதத்தின் சில சிறுகதைகள் போன்ற படைப்புகள் கனவோடை உத்தியில் அமைந்தவையாகக் கொள்ளலாம். இவ்வுத்தி புதினத்தித் கென்றே எழுந்த காரணத்தால் பழைய இலக்கியங்களில் இதனைப் பொருத்திப் பார்ப்பதற்கு இடமே இல்லை. இன்றைய புதுக் கவிதைகள் சிலவற்றில் இந்த உத்திமுறை கையாளப் பெற்றிருப்பதைக் காணலாம். சி. மணியின் "கரகம்" என்ற புதுக்கவிதை நனவோடையில் அமைந்தது எனக் கொள்ளலாம். இதனை விளக்குவோம். சென்னை மாநகரிலுள்ள காட்சிகள் கவிஞரின் மனத்தில் உணர்ச்சிகளையும் சிந்தனை களையும் கணத்திற்குக் கணம் ஏற்படச் செய்கின்றன. இங்கு மனிதனுக்குத் தான்வாழும் நாகரிக உலகம் ஒரு விசித்திரமான போர்க்களமாக அமைகின்றது. அன்றாட வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் மோதல்கள் மிகச் சிக்கலானவை. எது, ജു.ജ്ജു, - 16. புதுக்குரல்கள்.நாகம் (கி.மணி.)-பக்.78