பக்கம்:பாட்டுத் திறன்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 4?’so உட்படுத்துகின்றது என்ற ஃபிராய்டின் கொள்கைக்கு இக் கவிதை ஒரு விளக்க உரையாக அமைகின்றது. மேலைநாட்டு காகரிக வாழ்வை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாமலும் கீழை காட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு விட்டுவிட இயலா மலும் திண்டாடுகின்ற இந்த காட்டின் இன்றைய பெருநகரத்தில் வாழும் ஒருவனின் உணர்ச்சிக் குழப்பங்களைக் கவிதை படம் பிடித்துக் காட்டுகின்றது. காம உணர்வைத் துாண்டிவிடும் சூழ் கிலைகளும் திரைப்படம், இலக்கியம் ஆபாச இதழ்கள், கடற் புறம் போன்றவைகளும் அநுபவிக்க ஆசையிருந்தும் வசதிகள் இல்லாமல் ஏங்கித்தவிக்கும் ஓரிளைஞனின் உள்ளத்தை உணர்வு களை கினைப்பை எந்தஅளவு பாதிக்கின்றன என்பதைக் கவிதை அற்புதமாகச் சித்திரிக்கின்றது.