பக்கம்:பாட்டுத் திறன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாட்டுத் திறன் எடுத்துக்காட்டாக, கம்ப ராமாயணத்தில் ககர் நீங்கு படலத் தைப் படிப்பதில் சில செய்திகளை அறிகின்றோம்; இன்பமோ துன்பமோ பெறுகின்றோம். அப்படலத்தைப் படிப்பதில் முயற்சிகொள்ளுகின்றோம். அல்லது அதைத் தள்ளிவைத்து விட்டு வேறு எதிலோ ஈடுபடுகின்றோம். இச்செயலில் இம் மூன்று கூறுகளின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். இது சிக்கலானதொரு கோலமாகும். இஃது உண்மையிலேயே மூளையின் செயலாகும். அவ்வப் பொழுதிருக்கும் உள நிலை களுக்கேற்றவாறு மூளைச் செயல்களில் இந்த மூன்று கூறு களில் ஒன்று முனைப்பாகவும் மற்றவை இரண்டு அடங்கியும் இருக்கும். ஆனால், ஒவ்வொரு நடத்தைக் கோலமும் அஃது எளிதாயிருப்பினும், அன்றிச் சிக்கலாக இருப்பினும், துண்ட வின் கொள்வாய்க்கும் இயங்குவாய்க்கும் உள்ள நரம்புப் பாதையிலேயே இயற்றப்பெறல் வேண்டும். மனிதன் ஓர் உயர்ந்த உயிரி. ஆகவே, தனித் தாண்ட லொன்று ஒரு தனிக்கொள்வாயில் செயற்படுகின்றது என்று எண்ணுவது தவறு. ஒரு தூண்டற்கோலத்தில்’ ஒரே சமய த்தில் பல துண்டல்கள் உள்ளன. ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழினும் சுமார் 7000 நரம்புகளைக் கொண்ட கமது உடல் மிகவும் நுட்பமானது. எனவே, இது மிக நுண்ணிய வினைகளையும் புரிகின்றது. கல்லூரி நூலகத்திலுள்ள மாணாக்கன் ஒருவன் பலவகை யில் தூண்டப்பெறுகின்றான். அவன் அண்மையில் நடைபெற விருக்கும் தேர்வின் பொருட்டு கவிதையநுபவம் பற்றிய ஒரு முக்கிய வினாவிற்கு விடைதேடுகின்றான். கையிலுள்ள நூலைப் பார்த்து உணர்கின்றான், ஒரு மூலையில் இரண்டு பேர் பேசு வதைக் கேட்கின்றான்.சாளரத்தின் வழியாகப் பரந்த பொட்ட லிலிருந்து வீசும் வெப்பக் காற்றை உணர்கின்றான். இதற் கிடையே கல்லூரி முதல்வரின் வருகையால், அவருக்கு மரியாதை செலுத்துவான் வெண்டி எழுந்து கிற்கின்றான். இத் தூண்டல்கள் யாவும் வெவ்வேறு அளவுகளில் அவனைத் தாக்கிய போதிலும் அவனுடைய கவனம் முக்கியமாக அவன் முன்னி 45. Gss sco - Patterns

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/56&oldid=813131" இலிருந்து மீள்விக்கப்பட்டது