பக்கம்:பாட்டுத் திறன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W இலக்கிய இலக்கண உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றுடன் இணைத்து ஆராயப்பெற்றுள்ளது. அண்மை ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் முனைந்து போற்றும் இமேசரி' என்ற படி மம் கட்புலப் படிமம், செவிப்புலப் படிமம், சுவைப்புலப் படிமம், நாற்றப்புலப் படிமம் முதலாயின நிரலுறப் பகுக்கப்பெற்றுப் பொருத்தமான தமிழ் இலக்கிய மேற்கோள்களுடன் நல்கப் பெற்றுள்ளன. சுவைகள் என்ற இயல், இரசம் பற்றிய பழைய கோட்பாட் டைப் புதிய புனைவில் அளிக்கின்றது. தற்போது தமிழ்க் கவிதை உலகில் தலைமை பெற்று இன் றைய இதழ்களில் முன்னிடம் எய்தி இருக்கும் புதுக் கவிதையின் உருவம், உள்ளடக்கம், உத்தி ஆகியன ஆராயப்பெறுகின்றன. தமிழகத்தில் தமிழ் ஈழச் செல்வாக்கின் விளைவாக மார்க் சீய அடிப்படையில் நிகழும் இலக்கிய ஆராய்ச்சி அறிமுகம் பெற் றுள்ளது. அது மிகப் பெரிய ஆய்வு நெறிமுறையாகும். அந்த அடிப்படையிலும், சுருக்கமாக, நூலாசிரியரால் தமிழ்க் கவி தைகள் திறனாயப் பெற்றுள்ளன. அதற்கு எதிர்த் திசையான தனிமனிதத்துவ நோக்கும் கவிதைப் படைப்பில் இடம் பெற்றி ருப்பது நூலில் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது: தமிழர்கள் நகைச்சுவை உணர்வு குறைந்தவர்கள் என்ற ஒரு கருத்து உண்டு. புதுக் கவிதை நகைச்சுவையை வைத்து பின்னப் பட்டிருக்கும் பாங்கை நூலாசிரியர் விரிவான எடுத்துக்காட்டு களுடன் விளக்குகின்றார். படிமக்கோட்பாடு, குறியீட்டியல், மீமெய்ம்மையியல், நனவோடை ஆகியன தமிழ் இலக்கியத் திறனாய்வு உலகிற்குப் புதிய வரவுகளாகும். அவற்றைப்பற்றிய கருத்தும் நூலின் இறுதியில் சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய மாணாக்கர்க்குத் திறனாய்வைத் தொடக்க நிலையில் அனைத்துப் பார்வையிலும் அறிமுகப்படுத்தும் நூலாகப் பாட்டுத்திறன் நூல் அமைந்துள்ளது. நூல் ஆசிரி யரின் அளவிறந்த முயற்சி பாராட்டத் தக்கது. இடம்: புதுச்சேரி நாள்: 5.12.88 க. ப. அறவாணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/6&oldid=813139" இலிருந்து மீள்விக்கப்பட்டது