பக்கம்:பாட்டுத் திறன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 53 மேற்பூத்தண்டு : பூத்தண்டுக்குக் கீழே மேற்பூத்தண்டு’ என்ற மற்றொரு துணைமையம் உள்ளது. இப்பகுதியிலுள்ள பல் வேறு நரம்பு மையங்களின் செயல்கள் முழுவதும் இன்னும் கண்ட றியப் பெறவில்லை. எனினும், மேற்பூத்தண்டு தன்னாட்சி நரம்பு மண்டலம் செயற்படுவதுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள் ளது. பரிவு 5ரம்பு மண்டலமும், துணைப் பரிவு நரம்பு மண்டல மும் மேற்பூத்தண்டிலுள்ள நரம்பு மையங்களால் கட்டுப்படுத்தப் பெறுகின்றன. மேலும், இப்பகுதி உடலின் வளர்-சிதை மாற்றத்தின் பெரும் பகுதி, சூட்டுகிலைக் கட்டுப்பாடு, பால் பற்றிய செயல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகின்றது. அடித் தலைச் சுரப்பி இப்பூத்தண்டுடன் இணைந்துள்ளது. பூத்தண்டையும் மேற்பூத்தண்டையும் சேர்த்து இடைமூளை' என்று வழங்குவதுமுண்டு. பூத்தண்டும் மேற்பூந்தண்டும் சேர்ந்து செய்திகளையும் உள்துடிப்புகளையும் மூளையின் மேலிடங்களுக்கு அஞ்சல் செய் கின்றன. அன்றியும், புறணிமையங்களிலிருந்து இந்த இடத் திற்கு அடிக்கடி செய்தித் தொடர்பும் நடைபெறுகின்றது. இவை இரண்டும் தலைமையதிகாரி ஆடிக்கடி கலந்து யோசிக்கக்கூடிய துணையதிகாரிபோல் ( Persons: Assistant) Gerau bu Q R ir spør. உள்ளக்கிளர்ச்சிகளின் பொழுது இப்பகுதிக்கும் மூளையின்மேல் மையங்களுக்கும் தொடர்ந்தாற்போல் விரைவான செய்திப் போக்கு வரவுகள் நடைபெறுகின்றன என்பதை நரம்புபற்றிய சோதனைகளாலும் உற்று நோக்குதல்களாலும் அறிகின்றோம். உள்ளக் கிளர்ச்சி ஏற்படுங்கால் நாம் ஒருவித முடிவுக்கு வரா மலும் குழம்பிய கிலையிலும் இருப்பதற்கு இதுவே காரணமாக இருத்தல் கூடும் என்று விளக்கம் தருவதற்கு இது இன்றியமை யாததாக வுள்ளது. இதுபற்றிய மேலும் சில விவரங்களை உள் ளக் கிளர்ச்சியை ஆராயுங்கால் காண்போம். பெரு மூளை இது மண்டையோட்டின் பெரும் பாகத்தை அடைத்துக் கொண்டுள்ளது; இது இரண்டு அரைக் கோளங்க ளாகப் பிரிக்கப் பெற்றுள்ளது. இது நெருங்கி அமைக்கப்பெற்ற பெரும் நரம்பணுத் தொகுதிகளால் அமைந்தது; இது சற்றேறக் குறைய மண்டையோடு முழுவதையும் கிரப்பு 23. Gloģgšzsin G - Hypothalamus. 24. &«o i-y « sit - Interbrain,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/65&oldid=813152" இலிருந்து மீள்விக்கப்பட்டது