பக்கம்:பாட்டுத் திறன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 55 பெருமூளையே கனவுக்கு இருப்பிடம். இதையே மேல் மையம்" என்பர். சிறு மூளையையும் முதுகு நடு நரம்பையும் கீழ் மையங்கள்? என்பர். விருப்பச் செயல்கள்? மேல் மையத்தா லும், அனிச்சைச்செயல்கள் கீழ் மையங்களாலும் ஆளப்பெறு கின்றன. பெரு மூளை நடு நரம்புத் தொகுதியின் கீழ்மையங் களினின்று துடிப்புகளை ஏற்றுக் கட்டளைகளை அனுப்பு கின்றது. ஆகவே, இது துடிப்புகளைத் திருத்தியமைத்துக் கோலமிடும் ஒரு பொருத்தப்பாட்டு மையமாகும். இது கடு நரம்புத் தொகுதியின் இயைபு மையங்களின் மேல் ஆட்சி புரியும் ஒர் உயர் மையமுமாகும். சிலசமயம் பெருமூளையின் செயல் கீழ் மையங்களின் செயலுக்குத் துணைபுரிகின்றது. வேறு சில சமயங் களில் இச் செயலைத் தடுக்கவும் செய்கின்றது. தன்னாட்சி கரம்பு மண்டலம் : இதிலுள்ள நரம்புகள் முது கெலும்பின் இரு புறங்களிலும் சங்கிலித்தொடர்போல் சிறிய உருண்டையான நரம்பணுத் திரள்களாக அமைந்துள்ளன.இவ் விரண்டு சங்கிலிகளும் மண்டையோட்டிலிருந்து முதுகு நடு நரம் பின் அடிப்பாகம் வரையிலும் செல்லுகின்றன. தன்னாட்சி நரம்பு மண்டலம் பல தொடுத்தல்கள் அடங்கிய ஒரு நரம்பு வலையாகும். இதில் இரு பகுதிகள் உள்ளன : (1) பரிவு நரம்பு மண்டலம்': இதிலிருந்து இதயம், நுரையீரல், சில சிறப்பான சுரப்பிகள் ஆகியவற்றிற்கு நரம்புகள் செல்லு கின்றன. ஒரு விபத்தான அல்லது கிளர்ச்சியான சமயத்தைச் சமாளிக்க நேரிடுங்கால், வெகுண்டெழுந்து போரிட வேண்டும்: அல்லது வெருவியோடித் தப்ப வேண்டும். இம் மண்டலம் சுரப்பி களின் நீர்களால் இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்து, துரை யீரலையும் விரைவாக இயங்கச் செய்கின்றது. இதனால் செரி மானம் தற்காலிகமாகத் தடைப்படுகின்றது. (3) துணைப் பரிவு நரம்பு மண்டலம் : இம் மண்டலம் முற் கூறிய மண்டலத்திற்கு எதிராகச் செயற்படுவது. மேற்கூறியவாறு விரைவாகத் துடித்த 33. E sors; - Consciousness. 34. Giná woulio - Higher centre. 35. g.g. spicuoso.sir - Lower centres 36. snas à už Gau à - Voluntary action. sz. grib eszprš gassir sisir - Nerve ganglia. 88. afsı su bu esir -opio - Sympathetic nervous system. 38. துணைப் பரிவு நாம்பு மண்டலம் - Para sympathetic system,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/66&oldid=813154" இலிருந்து மீள்விக்கப்பட்டது