பக்கம்:பாட்டுத் திறன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாட்டுத் திறன் இதயத்தின் வேகத்தைத் தணித்து உயிரியை அமைதி நிலைக்குக் கொணர்கின்றது. அங்ங்னமே, சிறு குடலில் முடிவுறும் துணைப் பரிவு நரம்புகள் தூண்டப்பெற்றால் புழுத் துடிப்பு போன்ற செயலும் நீர் சுரத்தலும் அதிகரிக்கின்றன; பரிவு 5ரம்புகள் சிறு குடல் அசைவையும், அதிலுள்ள சுரப்பிகளில் நீர் ஊறுவதையும் தடைப்படுத்துகின்றன. இவற்றின் செயல்களை, உள்ளக் கிளர்ச்சிகளை ஆராயுங்கால் மேலும் விரிவாகக் காண்போம். கம் உடற்செயல்களும் உள்ளச்செயல்களும் தாண்டல்துலங்கல் விதியைத் தழுவியுள்ளன என்று முன்னியலில் குறிப்பிட்டோமன்றோ? இதற்குத் துணை புரிவது இம்முடைய நரம்பு மண்டலமாகும். நரம்பு மண்டலங்தான் கம்முடைய கடக் தையைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகின்றது. புகுவாய்கள் துரண்டல்களைச் சூழ்நிலையினின்றும் ஏற்கின்றன; இச் செய்தி கள் மூளையை யடைகின்றன (பொருத்துவாய்). மூளை தரும் ஆணை இயங்குவாயை அடைகின்றது. காம் துலங்குகின்றோம். சுருங்கக்கூறின், நரம்பு மண்டலம் சூழ்நிலையிலிருக்கோ, அன்றி உடலினுள்ளிருந்தோ தாண்டல்களை ஏற்க, அவற்றிற்கேற்ப நாம் துலங்குகின்றோம். அஃதாவது, நம் உளச்செயல்கள் யாவும் தாண்டல்-துலங்கல்களுக்கிடையே கடைபெறுகின்றன. பொருத்துவாயாகிய மூளையும் 5ரம்புத் தொகுதியும் இல்லையா யின், நம் உடலிலும் உள்ளத்திலும் எவ்விதச் செயலும் கடை பெற இயலாது. மேற்கூறியவற்றால் ஒவ்வோர் உள நிகழ்ச்சிக்கும் தூண் டலே மூலம் என்றும், அங்கேழ்ச்சிக்கு ஒரு பண்பு உண்டென் றும், விளைவுகள் உளவென்றும் தெரிகின்றன. விளைவுகள் செயலாகவும் இருக்கலாம்; செயலுக்கேற்ற பொருத்தப்பாடாக வும் அமையலாம். அந்த நிகழ்ச்சியின் பண்பு சிலசமயம் அகக் காட்சிக்கு’ எட்டக்கூடியதாகவும் இருக்கலாம். சில நிகழ்ச்சிகள் உணரக் கூடியனவாகவும் உணரப்பெறக் கூடியனவாகவும் உள்ளன; சில உணரப்பெறக் கூடியனவாக இல்லை. என் சில சிகழ்ச்சிகள் கனவு கிலையிலும், சில கனவிலி நிலையிலும் உள்ளன என்பது இன்னும் தீராத புதிராகவே" உள்ளது. 40. < **** -à-Introspection. 41. புதிர் என்பது தொல்காப்பியத்தில் பிசி என்ஆ வழங்கப் புெது: இன்றது. பிசி என்பது அ டிவரையறை இல்லாத செய்யுள் வகையுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/67&oldid=813156" இலிருந்து மீள்விக்கப்பட்டது