பக்கம்:பாட்டுத் திறன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் சாதிகுலம் சமயம்ளலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் - தனித்திரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே! ஆதிகடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம் ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்கிறை ஒளியே ஓதிஉணர்க் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே! சோதிமய மாய் விளங்கித் தனிப்பொதுவில் கடிக்கும் துயகடித் தரசே,என் சொல்லும் அணிந்தருளே! -இராமலிங்க அடிகள் இயற்கைப் பொருள்களிலும் வாழ்க்கையதுபவத்திலும் ஒரு வித இன்பத்தைக் கண்டு உள்ளத்தில் பூரிப்படைபவர்கள் ஒரு சிலரே. எல்லோரும் அவற்றில் இன்பத்தைக் காணுவதென்பது எளிதான செயலன்று. அவ்வாறு காண்பதற்கு உள்ளத்தில் கனிவு வேண்டும். சிறந்த ஞானியரும் யோகியருமே அந் நிலையை அடைதல் கூடும். பெரும்பாலோரின் மனம் புலன் களால் வளர்ந்து அமைந்து முற்றிலும் அவற்றிற்கு அடிமைப் பட்டிருப்பதே அதற்குக் காரணம் என்று கருதலாம். மேலான நனவு நிலையைப் (Superconscious) பெற்றுள்ள-உள்ளொளி யைப் பெற்றுள்ள-சிலரும் அந்நிலைக்குத் தக்க பயிற்சி அளித்து அதன்மூலம் தெய்விக நனவு நிலையை (Divine consciousness) எய்திய ஒருசிலருமே பெரும்பாலும் புலன் உணர்ச்சிகட்கு அதிகம் அடிமைப் படாமல் நேராக மனத்தின் மூலமே-நனவு நிலையி லேயே-அனைத்திலும் இன்ப நிலையைக் காணும் ஆற்றலைப் பெறுவர். - கணந்தோறும் மாறிக் கொண்டிருக்கும் இயற்கையிலும், துன்பமும் இன்பமும் ஏக்கமும் இக்கட்டுகளும் நிறைந்துள்ள வாழ்க்கையிலும் பெரும்பாலோர் இன்பம் காணவேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலேயே அறிஞர்கள் அதற்கு ஒரளவு சாதனங்களாக அமையக் கூடிய ஓவியம், சிற்பம், நாடகம், நாட்டியம், இசை, இலக்கியம் போன்ற கலைகளை வளர்த்திருக்கின்றனர். இசை தவிர மற்றக் கலைகளில் உணர்ச்சி, கற்பனை என்பவற்றோடு கருத்தும் ஓரளவு கலந்து கிடக்கும். இசைக் கலையில் மட்டிலும்-அதாவது, சொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/7&oldid=813162" இலிருந்து மீள்விக்கப்பட்டது