பக்கம்:பாட்டுத் திறன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாட்டுத் திறன் கிளர்ச்சியுற்ற சிலை, சோர்வுத் லை, மகிழ்ச்சி ைேல, துன்ப நிலை போன்ற பல்வேறு நிலைகள் ஒருவரிடம் அமையலா மன்றோ? எனவே, ஓர் உயிரியின் இத்தகைய நிலையும் அதன் துலங்கலுக்குச் சிறந்த ஒரு கூறு ஆகின்றது. மேற்கொண்டிருக்கும் வேறு செயல்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் ஏதாவது ஒரு கோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கலாம். இக்கிலையில் ஒரு தாண்ட லுக்கு அவர் துலங்குவது அவர் மேற்கொண்டிருக்கும் செயலைப் பொறுத்தது. அத்துண்டல் தான் மேற்கொண்டிருக்கும் செய லுடன் தொடர்பின்றியிருக்தால், கூடியவரை அவர் அத்தான் டலைப் புறக்கணிப்பார்; அத்துண்டல் அவருடைய செயலைத் தடை செய்யுமாயின், துரண்டலைத் தடுத்து விற்பார் அல்லது அதை நீக்குவார்; அஃது அவர் மேற்கொண்டுள்ள செயலுக்குக் துணைபுரியுமாயின், அதற்கேற்பத் துலங்குவார். மேற்கூறியவற்றால் ஒரு துலங்கலில் தனியாளின் சிறப் பியல்புகள், அவருடைய அகநிலை, மேற்கொண்டுள்ள செயலின் கோக்கம், தூண்டலின் தன்மை என்ற கான்கு கறுகள் இணைந்து செயற்படுகின்றன என்று அறிகின்றோம்; துலங்கல் இந்த நான்கு கூறுகளையும் பொறுத்திருக்கும்; சில சமயம் தெளிவாக ஒன்றினையும், பிறிதொரு சமயம் தெளிவாகப் பிதி தொன்றையும் பொறுத்திருக்கும். ஓர் இளைஞன் வயதுவந்த ஒரு கங்கையை காடுங்கால் அவள் எவ்வாறு துலங்குவாள்? அவள் துலங்குவது அவளுடைய மீப்பண்பு, சிறப்பியல்பு, பழக்கங்கள், கடக்க கால அதுபவம் ஆகியவற்றைப் பொறுத் தது. மேலும், அது அச்சமயத்தில் நிலவும் அவளுடைய سایه கிலை, உள்ளக்கிளர்ச்சி கிலை ஆகியவற்றையும் பொறுத்தது. அன்றியும், அவள் அச்சமயம் மேற்கொண்டிருக்கும் செயலையும் பொறுத்தது. இன்னும் கறப்போனால், அஃது அந்த இளைஞனையும் அவனுடைய முறையீட்டை'யும்’ பொறுத் தது. எனவே, மேற்கூறிய நான்கு கூறுகளிலும் எது மிக வன்மை வாய்ந்தது, கவனத்தை ஈர்ப்பது என்று செல்வது கடினம். சில சமயம் ஒன்று முனைப்பாக கிற்கும்; இன்னொரு சமயம் பிறிதொன்று முனைப்பாக விற்கும். சில சமயம் கடுமை

  1. 1. Bausou-Temperament. 52. Georg-Appeal,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/71&oldid=813165" இலிருந்து மீள்விக்கப்பட்டது