பக்கம்:பாட்டுத் திறன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 பாட்டுத் திறன் கொள்ளை கொள்ளும் ஒரு கதையினைப் படிக்கும் பொழுது, நூலின் அச்சிட்ட பக்கத்திலிருந்து கற்பனை விகழ்ச்சிகளின் குறியீடுகளாகத் தூண்டல்களைப் பெறுகின்றோம்; இதில் கம்முடைய சுற்றுப்புறங்களில் நடைபெறும் விகழ்ச்சியின் து.ாண்டல்கள் நம்மைத் தாக்குவதில்லை. காளைக்குச் செய்ய வேண்டியவை யாவை என்பதைத் தாழ்வாரத்தில் கடந்து கொண்டே திட்டமிடுகின்றோம்; இதில் நம்முடைய தசைகளும் பங்கு பெறுகின்றன். பிற சமயங்களில் 5ம் முன்னால் இல்லாத கண்பனை எண்ணுகின்றோம்; அல்லது மகிழ்ச்சியான அல்லது துன்பகரமான முன் நிகழ்ந்த நிகழ்ச்சியோன்றினை நினைவு கூர்கின்றோம்; தொலைவான இடத்தில் என்ன நடைபெறு கின்றது, அல்லது வருங்காலத்தில் என்ன கடைபெறும் என்று எண்ணி வியக்கின்றோம். இம்முடைய பகற்கன வின் பொது எண்ணங்கள் மிகக் கோவையாக எழுகின்றன; செயல்கள் எவ்வாறு நடைபெறவேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு நம் விருப்பப்படி வானக் கோட்டைகளைக் கட்டுகின்றோம். சில சமயம் நாம் எழுதப் போகும் கற்பனைக் கதையில் இம்மையே கதைத் தலைவனாகவும் அமைக்கின்றோம். இவ்வாறு கருத்து நிலையில் செய்யப்பெறும் செயல்கள் எண்ணற்றவை. மொழி இதற்குப் பெருந்துணைபுரிகின்றது; சிந்தனைக்குரிய செய்திகளைத் திரட்டுவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றது. சில சமயம் மொழி சிந்தனைக்குத் தடையாகவும் அமைதல் கூடும். அலங்காரச் சொற்றொடர் கம்மைத்தவறான கருத்திற்குக் கொண்டுசெலுத்தும்; அல்லது பொருள் புரியாமலேயே புரிந்ததாக எண்ணும்படி செய்துவிடும். இதன் காரணமாகவே வெற்றெனத் தொடுத்தலை'ச் சிலர் கவிதையாக எண்ணு கின்றனர். சொல்மாரியை-சொற்பொழிவினை-கருத்துப் பொழிவாகக் கொண்டு மயங்குகின்றனர். இக்கருத்து சிலைச் செயல்களால் ஏற்படும் தூண்டல்களே கவிதையதுபவத்தி ற்கு முதற் காரணமாக அமைகின்றன. S? - 14-5ssrst - Daydream

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/73&oldid=813170" இலிருந்து மீள்விக்கப்பட்டது