பக்கம்:பாட்டுத் திறன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-4 உணர்தலின் அடிப்படை சென்ற இயவில் செய்திகளை அறிவதற்கு அடிப்படை யாகவுள்ள நரம்பு மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்தோம், உணர்ச்சிச் செயலிலும் இது பங்கு பெறுகின்றது. ஆனால், உணர்ச்சிகளுக்கு - உள்ளக்கிளர்ச்சிகளுக்கு - அடிப்படையாக இருப்பது உள்நோக்கிச் சுரக்கும் சுரப்பி மண்டலம்; அதோ வது, ஆரம்பிலாச் சுரப்பிகள் அடங்கிய மண்டலம். இதனைச் சற்று விர்வாக ஆராய்வோம். பல்வேறு சுரப்பிகள்: கம்முடைய உடலில் பல்வேறு சுரப்பிகள் உள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமானவை உள் நோக்கிச் சுரக்கும் சுரப்பிகள்’ ஆகும். இவற்றில் ஊறும் சாறு களை இயக்குர்ேகள்’ என்று வழங்குவர். இவை நேரடியாகக் குருதியோட்டத்தினுள் விடுவிக்கப்பெற்று உடலெங்குமுள்ள அணுக்களுக்குக் கொண்டு செல்லப் பெறுகின்றன. இந்தச் சுரப்பிகள் துாம்புகளைப்பெற்றிராததால், உடற்கூற்று இயலார் இவற்றைத் துரம்பிலாச் சுரப்பிகள்’ என்றும் தன்னுளே சுரக்கும் சுரப்பிகள் என்றும் வழங்குவர். மேல்தலைச் சுரப்பி, அடித் தலைச் சுரப்பிகள்,புரிசைச் சுரப்பிகள், துணைப்புரிசைச் சுரப்பி கள், கழுத்துக் குழைச் சுரப்பி, மாங்காய்ச் சுரப்பிகள், குற்பை கள். அல்லது விரைகள், தெளிவான தனிப்பட்ட சில கணையப் பகுதிகள் ஆகிய துரம்பிலாச் சுரப்பிகள் உள்நோக்கிச் சுரக்கும் சுரப்பி (எண்டோகிரீன்) மண்டலத்திலமைந்தவை. கடந்த சில யாண்டுகளாக இச் சுரப்பி மண்டலத்தின் செயலைப் பற்றிய அறிவு மிக அதிகமாகப் பெருகி யுள்ளது. இத்துறை பற்றிய தகவல்கள் யாவும் அடிக்கடி மாறக் கூடியவை; திருத்திக்கொள்ளக் கூடியவை. காரணம், 1. உள்நோக்கிச் சுசக்கும் கசப்பு மண்டலம் Endoorime System, 2. & rātāāsit-Giands. 3. உள்நோக்கிச் சுரக்கும் சுரப்பிகள்.Endocrine glands, 4. §as 3.3, 5, #3, sir-Hormones, . 5, stoo so lis-Ductiess gland.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/74&oldid=813171" இலிருந்து மீள்விக்கப்பட்டது