பக்கம்:பாட்டுத் திறன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 65 முடைய ஒப்பற்ற இயக்குர்ேகளை உண்டாக்கிக் கொள்ளு கின்றன என்பதைப் பற்றிய கம்முடைய அறிவு மிகவும் தொடக்க நிலையில்தான் உள்ளது. இந்த இயக்கர்ேகளின் தன்மை பற்றியும், இவை கம் உடலில் உண்டாக்கும் விளைவு கள் பற்றியும் அதிகமான தகவல்களை நாம் அறிந்திருந்த போதிலும், இவை எவ்வாறு இவ்விளைவுகளை உண்டாக்கு கின்றன என்பதைப் பற்றிச் சிறிதும் அறியக்கூடவில்லை. தும்பிலாச் சுரப்பிகளில் ஏதாவது ஒன்றில் நேரிடும் மாறு தல்கள் பிறவற்றின் செயல்களையும் பாதிக்கும் என்பது ஓர் அடிப்படையான உண்மையாகும். தும்பிலாச் சுரப்பிகள்தம்மொடு தாமும், கரம்பு மண்டலத்துடனும் இணைந்து செயற்படும். எனவே, இவற்றுள் சமநிலை ஏற்படவேண்டியது மிகவும் இன்றியமையாதது. உள்ளக் கிளர்ச்சிகட்கும் இவற்றிற்கும் நெருங்கிய உறவு உண்டு. இதன் காரணமாகவே இவ்வுறுப்புக் களின் தன்மை, இவற்றில் ஊறும் சாறுகள், அச்சாறுகளால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை ஈண்டு ஆராயப்பெறுகின்றன. இதனைப் பின்னர் விளக்குவோம். ஈண்டு அந்தச் சுரப்பிகளின் இருப்பிடம், அமைப்பு, சுரக்கும் சாறுகள் இவை விளைவிக்கும் பயன்கள் ஆகியவற்றை மட்டிலும் ஒரு சிறிது கோக்குவோம். கமது உடலினுள்ள துளம்பிலாச் சுரப்பிகளின் இருப்பிடம் படத்தில் காட்டப்பெற்றுள்ளது. (படம்-3). மேல்தலைச்சுரப்பி : இது மூளையின் நடுவில் உள்ளது. இது பால் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது. குழந்தை நிலை முடிவுபெறும் வரையிலும் கழுத்துக் குழைச் சுரப்பி ஏனைய சுரப்பிகளைக் கட்டுப்படுத்துவதுபோல், இது பாலறி குறிகளை வளர்க்கும் மாங்காய்ச் சுரப்பியின் புறணி" இயங்காதவாறு தடுக்கின்றது. புணர்ச்சி என்ற இயல்பூக்கம் முற்றி அதற்கேற்றவாறு உடலும் மனமும் முற்றும் தரையில் இத் தடுப்பு நிலைபெறுகின்றது. அதனால் இளமை நீங்கும் வரை உடன்நிலைப் பாலறி குறிகள் தோன்றுவதில்லை. ஏழெட்டு யாண்டுகட்குப் பின் இம்மேல்தலைச் சுரப்பி சுருங்கக் 6. Guo &#6» so& &r úú-Pineal gland. 7 கழுத்துக்குழைச் சுரப்பி-Thymus gland, 8, too oriš + v rá-Adrenal gland. 9. 1 poi-Cortex. பா.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/76&oldid=813175" இலிருந்து மீள்விக்கப்பட்டது