பக்கம்:பாட்டுத் திறன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாட்டுத் திறன் தொடங்கியதும், புணர்ச்சி என்ற இயல்பூக்கமும் வளர்ந்து முற்றத் தொடங்குகின்றது. அடித்தலைச்சுரப்பி" : இது மண்டையோட்டின் அடிப் புறத்திலுள்ள ஓர் எலும்புச் சிமிழினுள் அமைந்துள்ளது. இது கடலைப்பருப்பு அளவுள்ளது.மங்கலான மஞ்சள்கிறமுடையது. இது நன்முறையில் குருதிக் குழல்களால் கிறைந்துள்ளது.உடற் கூற்று முறைப்படி கோக்கினால், அடித்தலைச்சுரப்பி மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. அவை . அடித்தலை முன்சுரப்பி,' அடித்தலைப் பின்சுரப்பி, அடித்தலை நடுச்சுரப்பி என்பன. அடித்தலை முன் சுரப்பியில் ஊறும் இயக்கர்ேகள் புணர்ச்சி கிலையையும், பாலறி குறிகளையும் இயக்குகின்றன. புரிசைச் சுரப்பி, மாங்காய்ச் சுரப்பி, இனகோளங்கள் போன்ற சுரப்பி களின் வளர்ச்சியினையும் இவை செயற்படுவதையும் கட்டுப் படுத்துகின்றன. இக்காரணத்தால் அடித்தலைச் சுரப்பி தலைமைச் சுரப்பி' என வழங்கப் பெறும். உடல் வளர்ச்சியிலும் இச்சுரப்பி பெருஞ் செல்வாக்குப் பெற்றுள்ளது. குழவிப்பருவத்தில் இது அளவு மீறிச் செயற் பட்டால் எலும்புகளும் தசைகளும் விரைவாக வளர்ந்து, தனியாள்" ஏழிலிருந்து ஒன்பது அடிவரை வளர்ந்து அரக்க உருவத்தைப் பெறக்கூடும். இவ்வாறு அளவுக்கு மீறிச் செயற் பட்டதன்' பிறகு இச்சுரப்பி தளர்ச்சியுற நேரிடும்; அப்பொழுது தனியாள் தசைவன்மை குன்றி இளமையிலேயே மரிக்கவும் நேரிடலாம். இதே சுரப்பி குழந்தையின் வளர்ச்சி நிலையில் சாதாரணமாகச் செயற்பட்டு, முதிர்ந்த பருவத்தில்" அளவுக்கு மீறிச் செயற்பட நேர்ந்தால் தனியாள் உயரமாக வளராமல் பெரிய கைகள், பெரிய பாதங்கள், பெரிய மூக்கு, பெரிய கீழ்க் தாடை முதலியவற்றைப் பெறுதல் கூடும். இதனை 10, e.g. #35, wi a rāš-Pituitary gland. 11. siq żg, so se epsir **ủâ-Anterior pituitary. 12. mų-šsa, sú asi **ủá-Posterior pituitary. 13. gs» se 3 s. rừ 3 - Master gland. 14. sesst un sir - Individuał. 15. அளவுக்கு மீறிச் செயற்படு Oweractive, 16, opääää, ligarh - Adult period.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/77&oldid=813178" இலிருந்து மீள்விக்கப்பட்டது