பக்கம்:பாட்டுத் திறன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

势微 Wii களால் ஆன பாட்டுக் கலவாத கலையில் மட்டிலும்-கருத்திற்கு இடம் இல்லை. இசை தவிர ஏனையவற்றில் கருத்துகள் இருப் பினும் அவற்றிற்குச் சிறப்பிடம் இல்லை. நாடகத்திலும் இலக்கியத்திலும் கருத்துகள் பல இடம் பெறுகின்றன. எனினும், அவற்றில் உணர்ச்சி சிறப்பிடம் பெற்றிருப்பதால் அவை கலை களாகப் போற்றப்பெறுகின்றன. உணர்ச்சிமங்கிய வாழ்வைப் பெறுவதையே எல்லாக் கலைஞர்களும் ஒரு பொதுநெறியாக கலை நெறியாகப்-போற்றி வருகின்றனர். மேற்கூறிய கலைகள் நாட்டுக்கு நாடு மொழிக்கு மொழி வேறுபடும் என்பதை நாம் அறிவோம். எனினும், ஒவியம் சிற்பம் இசை நாட்டியம் ஆகிய கலைகளை எல்லா நாட்டாரும் நுகர முடியும். அநுபவிக்க இயலும். நாடகக் கலையில் ஒரு பாதியே அனைவருக்கும் புலனாகும்; மொழி அறிந்தவருக்கே அக்கலையின் அநுபவம் ஏற்படும். இந்தி, ஆங்கிலம் போன்ற மொழி அறியாதவர்கள் அம்மொழிகளிலமைந்த திரைப்படங் களைக் காணும்பொழுது அவர்கட்கு இவ்வித அநுபவம் ஏற் படுவதை உணரலாம். இலக்கியக் கலை முற்றிலும் சொற் களால்-பொருள் குறித்த சொற்களால்-ஆனது. அதனை நுகர வேண்டுமாயின் அம்மொழியை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இக்கலை மக்கள் மனத்தில் குடிகொள்ளும் இயல் பினதாதலால் அது நெடுங்காலம் வாழவல்லது. இலக்கியத்தின் சிறந்த பகுதி கவிதை; அதன் உயிர் நாடியான பகுதியும் அதுவே. அது நாடக வழக்கானும் உலகியல் வழக்காலும் அமைகின்றது. கடந்த நாற்பதாண்டுகட்கு மேலாக இலக்கியத்தில்-சிறப் பாகக் கவிதை இலக்கியத்தில்-தோய்ந்து அவற்றை என் மனம் அதுபவித்துள்ளது. ஏற்கெனவே கவிதைக் கலையைப் பற்றித் திறனாய்வாளர்கள் கூறியுள்ளவற்றை ஓரளவு நடைமுறையில்சொந்த அநுபவத்தில்-சரி பார்த்தும் உள்ளது. இயற்கையும் வாழ்க்கையும் கலையில்-கவிதையில்-வழங்கப் பெறுவதற்கு அவர்கள் மூன்று காரணங்களைத் தருகின்றனர். (1) புலன்களை அடிப்படையாகக் கொண்ட மனத் திற்கு இயற்கையிலும் வாழ்விலும் காணப்பெறும் முருகின்பம் தெளிவானதாக இராது. ஆதலின், மனம் அதில் நன்கு தோய்ந்து நுகர இயலுவதில்லை. அவற்றில் வேண்டுவனவும் வேண்டாதனவும், பொருந்துவனவும் பொருந்தாத்ணவும் கலந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு குழம்பிய நிலையை மாற்றி அனைத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/8&oldid=813184" இலிருந்து மீள்விக்கப்பட்டது