பக்கம்:பாட்டுத் திறன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 69 அடித்தலை முன்சுரப்பி தைரோட்ரோபின்’ என்ற சாற்றினைச் சுரந்து புரிசைச்சுரப்பியின் செயலை ஒழுங்குபடுத்துகின்றது: அன்றியும், புரிசைச்சுரப்பியின் இயக்கு கீரை உற்பத்தி செய்ய வும் அதனைக் கட்டுப்படுத்தவும் துணைபுரிகின்றது. மேலும், இது மூளைக்கும் புரிசைச் சுரப்பிக்கும் ஒரளவு நடுவன்போல் அமைந்துள்ளது. மூளையினுள் தோன்றும் நரம்பின் உள்துடிப் புகள் புரிசைச்சுரப்பி செயற்படுவதில் பெரிய விளைவுகளை உண்டாக்குகின்றன. புரிசைச்சுரப்பி அளவுமீறிச் செயற்படுவ தால் மனக்கோளாறுகளும் நேரிடுகின்றன என்று கூறுவர். புரிசைச்சுரப்பி சரியாக இயங்குவதற்கு அடித்தலை முன் சுரப்பியைப் போலவே, அயோடின் அளவும் மிகவும் இன்றி யமையாதது. அயோடின் இன்றிப் புரிசைச்சுரப்பி ஆற்றலுள்ள இயக்க நீரை உற்பத்திசெய்ய இயலாது. இங்கிலையில் இச் சுரப்பி அயோடின் குறைவுள்ளதும், ஆற்றலில்லாததுமான பொருளை அதிகமான அளவுகளில் உற்பத்தி செய்கின்றது; இப்பொருள் அச்சுரப்பியைப்பருத்து வீங்கச்செய்துவிடுகின்றது. 'முன்கழுத்துக் கழலை' எனப்படும் தொண்டைக்கட்டி ஏற்படுவ தற்கு இதுதான் முதற்காரணமாகும். வேறுவிதமான தொண்டைக் கட்டிகளும் உள! இவை ஏற்படுவதும் இவற்றால் உடலுக்கு ஏற்படும் விளைவுகிளும் முற்றிலும் வேறானவை. ஒருவிதத் தொண்டைக்கட்டி அதிக அளவு சுறுசுறுப்புத் தன்மையுள்ள இயக்க நீரை உற்பத்தி செய்கின்றது. அளவுக்கு மீறி இவ்வாறு செயற்படும் புரிசைச்சுரப்பியைக் கொண்டுள்ள நோயாளிகள் மிகவும் நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பர்; அவர்கள் உடல் அடிக்கடி வியர்க்கும்; அவர்கள் மிகவும் பலக் குறைவுடையவர்களாகவும் இருப்பர். உடலின் வளர்-சிதை மாற்றச் செயல்கள் யாவும் துரிதப்படுத்தப் பெறும். சாதாரணத் தேவையைக்காட்டிலும் மீறிய அளவில் ஆற்றல் உற்பத்திக்காகச் சருக்கரை பயன்படுத்தப்பெறுவதுடன், பிகிதங்களும்: கொழுப்புப் பொருள்களும் சிதைக்கப்பெற்றுச் சருக்கரையாக மாற்றப்பெறும்; புரிசைச் சுரப்பியின் அதிகமான இயக்க நீரினால் மிகவும் தீங்கு பயக்கக்கூடிய விளைவுகளில் ஒன்று 28 en gGra r-Gs a asir-Thyrotropin. 29. தொண்டைக்கட்டி-Goitre. 30, 33%to - Protein,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/80&oldid=813186" இலிருந்து மீள்விக்கப்பட்டது