பக்கம்:பாட்டுத் திறன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 75 ர்ேகளையே சார்ந்துள்ளது. ஆனால், குழவியைக் கட்டியனைத் தல், பாலூட்டுதல், தூக்கிக் கொஞ்சுதல், மார்புற அனைத்துக் கொள்ளுதல் போன்ற தாயின் புற நடத்தைகள்’ யாவும் நரம்பு மண்டலத்தையும் மூளையையும் சார்ந்துள்ளன. இத்தாய்மை உணர்ச்சி தாய்க்கே உரியதாயினும், தக்தையிடத்தும் காணப் பெறுகின்றது பிராணிகளின் ஆண்களிடம் இவ்வுணர்ச்சி இல்லையாயினும், மனிதனிடம் அது உள்ளது என்பது ஒரு தலை. குழவியை அணைத்து மகிழும் தந்தையின் மனமே அதற்குச் சான்றாகும். மகனைப் பிரிந்து மன்னுயிர் நீத்த தயரதன் வரலாறு இலக்கியத்தில் காணும் ஓர் எடுத்துக் காட்டாகும். தாய்க்குரிய இவ்வுணர்ச்சி தந்தையிடம் எவ்வாறு வந்தது? இயற்கை மலர்ச்சி' முறையில் ஆணிடத்தே கானக் கிடக்கும் உடலமைப்பு சிறுசிறுகப் பெண்ணிடத்தும் வளரத் தொடங்குகின்றது. மானினிடத்தும் ஆட்டினிடத்தும் காணக் கிடக்கும் கொம்புகள் முதன்முதலில் சண்டையிடும் ஆண்களிடக் தான் தோன்றியிருத்தல் வேண்டும். பின்னர்ப் பயனை நோக்கிப் பெண்களிடமும் பரவியது. அஃதே போலப் பெண்ணிடம் எழுந்த இந்த இயல்பூக்கம் பயனை நோக்கி ஆணிடத்தும் பர வியது என்று கருதுதல் பொருத்தமாகும். . பாலறிகுறிச் சாறுகள் குழவிப் பருவத்திலும் இருப்பினும், முன் குமரப்பருவத்தில்தான் அதிகரிக்கின்றன. பாற்கவர்ச்சிக்கு இவை மிகவும் இன்றியமையாதவை. ஒருசிலரிடம் காம உணர்ச்சி மிக்கிருப்பதற்கும் ஒருசிலரிடம் அவ்வுணர்ச்சி குன்றி யிருப்பதற்கும் இந்தச் சாறுகளே காரணமாயிருத்தல் வேண்டும். இதுபற்றிய சான்றுகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எண்டோகிரீன் சமநிலை: சில இயல்பான மனப்போக்கு களிலும் உள்ளக்கிளர்ச்சிகளிலும் தனியாளிடம் காணக்கிடக்கும் வேற்றுமைகளுக்கு அவனிடம் அமைந்திருக்கும் உள்நோக்கிச் சுரக்கும் சுரப்பி அமைப்பே காரணம் என்று கருதலாம். இந்த அமைப்பு சமநிலையின்பிறழ்ச்சியினால்தான்.இவ்வேற்றுமைகள் காணப்பெறுகின்றன என்று உளவியலறிஞர்கள் கருதுகின்றனர். இதுபற்றிய சோதனைகளை மேற்கொள்வதும்,இவற்றால் உண் 53. # i- § 60 ĝ, -Behaviour. 84. இயற்கை மலர்ச்சி-Evolution. #5. (y &ár @ 1e¢ ù*ag$ oiúb - Aăo}escèxi.c£. 5ß, rinj so se - Balance.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/86&oldid=813196" இலிருந்து மீள்விக்கப்பட்டது