பக்கம்:பாட்டுத் திறன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் γγ அவனுடைய பசியை அதிகரிக்கச் செய்து, உடலிலும் சதை போடும் கிலையினை உண்டாக்கும். இதனால் சமூகத்தினரிடம் அவனைப் பற்றி ஏளனச்சொல் பிறக்கும். இதனால் அவன் சமூகத்தினிடமிருந்து விலகுவான், அல்லது சிடுசிடுப்புத்தன்மை அவனிடம் வளரும்; அல்லது ஆணையை எதிர்க்கும் தன்மை உண்டாகும்; அல்லது இனிப்புப் பொருள்களின் மீதுள்ள பசி யைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு அவன் திருடும் தொழி லில் இறங்கிவிடவும் கூடும். பெரும்பாலோரிடம் உள்நோக்கிச் சுரக்கும் சுரப்பிச் சமநிலை சரியாகவே உள்ளது. ஏதாவது ஒரு சுரப்பியில் இச் சமநிலைக் குறைவால் உண்டாகும் ஆளுமைப் பிறழ்வுகளும் கடத்தைப் பிறழ்வுகளும் மிக அரியனவே. ஒரு சிலரிடம் சிறிய அளவுகளில் காணப்பெறும் ஆளுமை வேற்றுமைகளுக்கு அவர்களிடம் இயக்கர்ேகள் செயற்படுவதில் உள்ள வேற்றுமைகளே காரணமா என்பது பற்றி இன்னும் தெளிவாக அறியக்கூடவில்லை. சில அறிஞர்கள் இயக்கர்ேகள்தாம் ஆளுமையை அறுதியிடும் கூறு கள் என்று வலியுறுத்துகின்றனர். சாதாரணமாகச் சுரப்பிகள் செயற்படுவதிலிருந்து, ஆளுமை வேற்றுமைகளுக்கு வேறு காரணங்களும் உள என்று கருதவேண்டியுள்ளது. இக் காரணங்களுள் ஒருசில உயிரியல் அடிப்படையானவையே; மற்றும் சில, சமூக அடிப்படையானவை. ஆனால், உள் கோக்கிச் சுரக்கும் சுரப்பிகள்தாம் ஆளுமையின் அடிப்படையான உயிரியல் கூறுகள் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாகும். கவிதையைய் படித்துச் சுவைப்பதில் ஓரளவு இந்த ஆளுமை பங்குகொள்ளுகின்றது. உணர்ச்சிகள் முதலியவற்றை கன்னிலை யில் கட்டுப்படுத்திய ஒரு கிலைதானே ஆளுமை என்பது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/88&oldid=813200" இலிருந்து மீள்விக்கப்பட்டது