பக்கம்:பாட்டுத் திறன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-5 உணர்ச்சியும் உள்ளக்கிளர்ச்சியும் கவிதையதுபவத்திற்கு உணர்ச்சியும் உள்ளக்கிளர்ச்சி களும் மிகவும் இன்றியமையாதவை. கவிதையை இயற்றிய கவிஞனின் உணர்ச்சி, அதில் வரும் கற்பனை மாந்தரின் உணர்ச்சி. அதைப் படிக்கும் நம் உணர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றும்பொழுதே கவிதையதுபவம் ஏற்படுகின்றது. இங்ங்னமே உள்ளக் கிளர்ச்சிகளால் ஏற்படும் மனநிலைகள், மீப்பண்பு, மேலீடான மனஉணர்ச்சிகள் போன்றவை பல்வேறு கவிதை களை விரும்பிப் படித்துத் துய்க்கக் காரணமாகின்றன. எனவே உணர்ச்சி, உள்ளக்கிள்ர்ச்சி ஆகியவற்றை ஈண்டு ஆராய்வோம். உணர்ச்சி: கனவு நிலையில் நம்முடைய செயல்கள் யாவற் றையும் பாதித்து நிற்கும் பொது உளநிலைமையை உளவியலார் உணர்ச்சி என்று குறிப்பிடுவர். உணர்ச்சி என்பது முற்றிலும் உள்ள்த்தில் உண்டாகும் நிகழ்ச்சியாகும். இன்பமும் துன்பமும் மிக முக்கியமான உணர்ச்சிகள். ஒரு பொருள் நம்முடைய தேவையை நிறைவேற்றுவதன் மூலம் நமக்கு ஏற்றதாக இருப் பின் அப்பொழுது இன்ப உணர்ச்சி உண்டாகின்றது. அங்ங் னமே, ஒரு பொருள் நம்முடைய தேவைகளுக்கு ஏற்றதாக இல்லாமலிருப்பதுடன் தீங்கையும் விளைவிப்பதாயின், அப் பொழுது துன்ப உணர்ச்சி உண்டாகின்றது. நம்மிடம் உண் டாகும் உணர்ச்சிப் பெருக்கை நாம் ஆய்ந்து பிரித்துக் காணத் தலைப்பட்டால், அது ஆற்று மணலை எண்ணிப் பார்ப்பது போலவும், கடலலைகளைக் கணக்கிட்டுப் பார்ப்பது போலவும் முடியும். இதனால் உணர்ச்சிகளை ஒருநாளும் எல்லை கட்டிப் பார்த்தல் இயலாது என்பது தெளிவாகும். உணர்ச்சியின் இருப்பிடம்: உணர்ச்சி ஒரு பொது சிகழ்ச்சி யாயிருத்தலால் அது கம் உடலில் எப்பகுதியில் உண்டாகின்றது 1- s.s. fšā-Feeling.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/89&oldid=813201" இலிருந்து மீள்விக்கப்பட்டது