பக்கம்:பாட்டுத் திறன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii நாடக வழக்காக அமைப்பின் மனம் அதனை நன்கு துகா கின்றது. (2) இயற்கையிலும் வாழ்விலும் பெறும் இன்பம் :பொய்யாய்,பழங்கதையாய், கணவாய், மெல்ல மெல்லப்’ போய் விடுகின்றது. நாம் விரும்பும் போது அவை கிடைப்ப தில்லை. நாம் வேண்டும்போது கிடைக்கக் கூடிய வகையில் கவிதை அதனைப் படைத்து நிலைக்கச் செய்கின்றது. எ-டு: கம்பனில் வரும் இருசுடர் தோற்றம், மருத நிலக்காட்சிகள், குறிஞ்சி நிலக்காட்சிகள் இவற்றை எப்பொழுது வேண்டுமா யினும் படித்து நுகரலாம். (3) நம்முடைய குழவிப் பருவத்தில் இயல்பான நிலையிலிருந்து புலன்கள் வாயிலாக அழகின்பத்தை துகர்ந்த மனம் வாழ்க்கைச் சுமையும் உலோகாயத மனப்பான்மை யும் பெருகி வளர்ந்து செயற்கையான போக்கிற்கு அடிமைப் பட்டுப் பொறிபோல் இயங்கத் தொடங்குகின்றது. மரத்துப்போன இத்தகைய மனத்தையும் கவிதை ஈர்த்து நிறுத்தி விருந்து ஊட்டத் தக்கதாக அமைகின்றது. ஒ.

  • ్క

இந்த நூல் உணர்ச்சியின் தத்துவம், கவிதையின் தத்துவம், புதுக்கவிதையின் தத்துவம் என்ற மூன்று பகுதிகளாக அமைந்து போட்டுத் திறன் என்ற கட்டுரை துதவிப் புகுதல்’ என்ற விதி யின் அடிப்படையில் நூலின் முன்னோடியாக இலங்குகின்றது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பத்தாண்டுகள் (1950-1960) பணியாற்றிய பொழுது உளவியல், கல்வியியல் பற்றிய கருத்து களிடையே ஆழ்ந்து கிடக்க நேரிட்ட பொழுது கவிதைக் கலை யில் நானாக ஈடுபட்டு உள்ளத்தை அதில் பறிகொடுத்து நுகர்ந்த பொழுது பாட்டுத் திறன் பற்றிய ஒரு சில கருத்துகளை அறிந் 受 தேன். திருப்பதியில் பதினேழு ஆண்டுகள் 1960-1977 பணியாற்றி 1978சனவரி முதல் சென்னையில் குடியேறிய பிறகு புதுக்கவிதை யில் ஈடுபட்டு அதனால் சில கருத்துகளையும் பெற்றேன். இவை யாவும் இந்நூல் வடிவம் பெற்றன. கவிதைக்கலையில் புக விழை வோருக்கு, அதன் நுட்பத்தை அறிய விழைவோருக்கு-குறிப் பாகத் தமிழ் முதுகலை வகுப்புகளில் பயில்வோருக்கு-இந்நூல் பெருந்துணையாக இருக்கும் என்பது என்கருத்து. கவிதையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/9&oldid=813202" இலிருந்து மீள்விக்கப்பட்டது