பக்கம்:பாட்டுத் திறன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் ፖ9 என்று கூறவொண்ணாது. அதனால் ஒரு குறிப்பிட்ட் அளவே நாம் எவ்விதம் செயலாற்ற வேண்டும் என்று வழிகாட்ட இயலும்; அதுவும் நிகழ்காலத்தில் மட்டிலுமே காட்டுதல் கூடும். எடுத்துக்காட்டாக இனிப்புப் பண்டங்களை உண்ணும்பொழுது இன்பம் உண்டாகின்றது; ஆனால், அதை நிறைய உண்பதால் நாளடைவில் துன்பமே விளைகின்றது. ஆமணக்கு எண்ணெய் பருகுங்கால் துன்பம் ஏற்படுகின்றது; ஆனால், காளடைவில் உடலுக்கு நன்மையே உண்டாகின்றது. ஓர் அநுபவத்தின் இன்ப துன்ப அளவை உணர்ச்சி வேகம்” என்று கூறுவர். இனிப்புப் பொருள்களும் கசப்புப் பொருள்களும் முறையே மிகுந்த இன்பத்தையும் மிகுந்த துன்பத்தையும் த்ருவதால் அவை அதிக உணர்ச்சி வேகத்தையுடைய பொருள்களாகும். ஆனால், உப்பு சேர்ந்த பொருள்கள் அத்துணை வேகம் உடையன அல்ல. உணர்ச்சியற்றிய இரு கொள்கைகள் : உணர்ச்சிகளுள் அடி நிலையாக உள்ளவை என்பது பற்றி இரண்டு கொள்கைகள் கிலவுகின்றன. செருமானிய நாட்டு உளவியலறிஞரான வுண்ட்” என்டார், இன்ப துன்பம்-ஊக்கம் ஒய்வு-கிளர்ச்சி அமைதி என ஆறு அடிநிலை உணர்ச்சிகள் இருப்பதாகவும், அடி நிலை உணர்ச்சி உண்டாகும் ஒவ்வொரு சமயத்திலும் இவற்றுள் ஏதேனும் மூன்று சேர்ந்தே காணப்பெறும் என்றும் கூறுவர். அஃதாவது, ஒருவர் இன்ப ஊக்கக் கிளர்ச்சி உணர்ச்சியோ துன்ப ஊக்க அமைத உணர்ச்சியோ உடையவராக இருப்பார், அமெரிக்க உளவியற் புலவரான இராய்ஸ் இன்ப துன்பம், கிளர்ச்சி அமைதி என்னும் கான்கு அடிகிலை உணர்ச்சிகளே உண்டென்று கூறுவர். இவ்விருவருடைய கொள்கைகளையும் உளவியலறிஞர்கள் அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வ தில்லை. கிளர்ச்சியும் அமைதியும் இன்பதுன்ப இனத்தைச் சேர்ந்த உணர்ச்சிகள் அல்ல; அவற்றைப் புலனுணர்வுகளின் கலவை என்று கூறலாமேயன்றி உணாச்சி என்று கூற இயலாது என்பது வுண்ட் என்பாரின் கொள்கைக்குக் கூறும் ஒரு முக்கிய மான மறுப்பாகும். உணர்ச்சியும் புலனுணர்வும் : உணர்ச்சிவேறு; புலனுணர்வு வேறு. புலனுணர்வு புற உலகை மைக்குத் தெரியும்படி செய் 2. உணர்ச்சி வேகம் : Feeling töf1è. 3. oặsia ::. .- Wundt. 4. இசாய்ஸ் - Royce, 5 - H se sir e-isrž si - Sensation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/90&oldid=813203" இலிருந்து மீள்விக்கப்பட்டது