உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டுத் திறன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாட்டுத் திறன் கின்றது; ஆனால், உணர்ச்சியோ அங்ஙனம் ஒன்றும் செய்வ தில்லை. அறிதல் வேறு, உணர்தல்வேறு.ஒரு குழந்தையிடம் ஒரு புது பொம்மையைக் கொடுத்தால் அது அப் பொம்மையைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றது. அக் குழந்தை அப் பொம்மையை ஒரு பொருள் என்று மட்டும் பார்க்குமாயின், அப்பொழுதுதான் அதற்கு அப்பொம்மை புதியது என்பது புலனாகும். ஆனால், குழந்தை அவ்வாறு பார்ப்பதில்லை. அது அப்பொம்மையைத் தனக்கு உகந்ததா என்று மட்டிலும் பார்ப்பதால் அதற்குப் புதியது, பழையது என்பது புலனாவதில்லை; அதற்கு மகிழ்ச்சி உணர்ச்சி மட்டிலுமே உண்டாகின்றது. இதிலிருந்து அறிவு நிலை வேறு, உணர்வு கிலை வேறு என்பது ஒரளவு புலனா கும். நீதி நூல்களைப் படிக்கும்பொழுது பல கருத்துகளை அறிந்து கொள்கின்றோம். அது மூளைக்கு விருந்தாக அமை கின்றது; அப்பொழுது அறிவு கிலை செயற்படுகின்றது. ஒரு காவியத்தைப் படிக்கும் பொழுது அங்குள்ள பல்வேறு நிகழ்ச்சி கள் நம்மை உணர்ச்சிவசமாக்குகின்றன; அப்பொழுது கம் உணர்வு நிலை செயற்படுகின்றது; அடியிற் கண்ட இரண்டு பாடல்கள் இதனைத் தெளிவாக்கும். முன்னமோர் பொய்யுரைக்க அப்பொய்வெளி யாகாமல் மூடும் வண்ணம், பின்னுமோர் பொய்யுரைக்க அதையும்நிலை நிறுத்தவோர் பெரும்பொய் சொல்ல, இன்னவகை கைதவமொன் றிருநூறு கைதவத்துக் கிடமாம், வாய்மை தன்னையே முன்பகரிற் சங்கடமொன் நிலையதுவே தகைமை கெஞ்சே." இகைதவம் - பொய் ; ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்குப் பல பொது கள் சொல்ல நேரிடுகின்றது. மெய் சொன்னால் எவ்வகையான துன்பமும் நேரிடாது' என்பது கவிஞன் உணர்த்த விரும்பிய உண்மை; திே இப்பாடல் 5ம் அறிவு கிலையைத் தொடுகின்றதே யன்றிய உணர்வு கிலையைத் தொடவில்லை. இன்னொரு பாடலைப் பார்ப்போம். 6. -oi:ioiô & sv - Cognition. * *-**esco Affection 8. முனிசிப் வேததாயகம் பிள்ளை நீதிநூல் (பொய்செய்.1:)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/91&oldid=813204" இலிருந்து மீள்விக்கப்பட்டது