பக்கம்:பாட்டுத் திறன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 母岛 ஒத்துணர வேண்டுமாயின் கமக்குச் சிறிதளவு கற்பனை வேண்டும். கம்மை அவர் கிலையில் வைத்துக்கொண்டு அவர் நோக்கத்தின்படி பொருள்களைப் பார்க்கும் நிலை நமக்கு வருதல் வேண்டும். கலைஞரிடத்தில் இந்நிலை சிறந்து விளங்கு கின்றது, இதனால்தான் கவிஞர்கள் துன்பத்தைப் பாடுவதோ டன்றி மற்றவர்கள் உறும் துன்பத்தையும் கற்பனை செய்து பாட வல்லவர்களாக விளங்குகின்றனர். புறநானூற்றில் நாம் காணும் பெரும்பான்மையான பாடல்கள் கவிஞர்களின் சொந்த இன்ப துன்பங்களைப் பற்றியவை. அகநானூறு போன்ற அகப் பொருள் நூல்களில் கானும் அகத்துறைப் பாடல்களில் உள்ளவை கவிஞர்களின் சொந்த இன்ப துன்ப உணர்ச்சிகள் அல்ல; அவை கவிஞர்கள் கற்பனை செய்த காதலர் முதலா னோரின் இன்ப துன்ப உணர்ச்சிகள்; கவிஞர்கள் அவற்றை காடக வழக்காகத் தம்முடைய கற்பனை மாந்தர் வாயிலாக உணர்த்தியுள்ளனர். ஒட்ட உணர்தல்' என்பது தன்னைப் பிறராகவே கருதி உணர்வது. எடுத்துக்காட்டாக, ஒரு சிறு குழந்தை கடுத் தெருவில் உட்கார்ந்துகொண்டு விளையாடுகின்றது. ஒரு மோட்டார் விரைந்து அக் குழந்தையை கோக்கி வந்துகொண் டுள்ளது. மோட்டார் தின்மீது ஏறிவிடும் என்ற அச்ச உணர்ச்சியே குழந்தைக்கு இல்லை. ஆனால், அதைக்கண்ணுறும் நாம் குழந்தை நிலையில் இருந்துகொண்டு அச்சவுணர்ச்சியைப் பெறுகின்றோம். காம் குழந்தையாகவே ஆகிவிடுகின்றோம். காம் ஒடிக் குழந்தையைத் தாக்க முயல்கின்றோம். இந்த உணர்ச்சியே 'ஒட்ட உணர்தல்' என்பது. ஒட்டஉணர்தல் கடத்தையில் புலனாகக்கூடியது. கல்வி நிலையங்களில் ஆட்டப் போட்டி யைக் கானும் கம்மிடம் இந்த உணர்ச்சி அடிக்கடி எழுவதை உணரலாம். உதைபந்துப் போட்டியில் ஒருவர் உதைபந்தைக் குறியிடம் உய்க்கும் கிலையில் இருக்கும் பொழுது பார்வை யாளர்களில் சிலர் அவருக்குப் பக்தை உதைப்பதில் துணை செய்வதுபோல் உணர்கின்ற கிலையைக் காண்கின்றோம்; அங்ங்னமே கம்புத் தாண்டலில் பங்குகொள்ளும் ஒருவரை உயர்ந்த சிலையிலுள்ள குறுக்குச் சட்டத்தைத் தாண்டும் நிலையில் காணும்பொழுது, காம் அவருக்குத் துணைசெய்வது 13. ஒட்ட உணர்தல்:Empathy. #4, s.sosuka-Foot-ball. 18. கம்புத் z restr._co-Pole-vault,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/94&oldid=813210" இலிருந்து மீள்விக்கப்பட்டது