பக்கம்:பாட்டுத் திறன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怒盔 பாட்டுத் திறன் போல் உணர்கின்றோமன்றோ? பார்வையாளர்கள். கற்பனை யில் அவ் வாட்டங்களில் பங்குகொள்கின்றனர்! இங்ங்னமே, ஒரு புதினத்தையோ காவியத்தையோ நாம் படிக்கும் பொழுது, நாம் கதை அல்லது காவியத் தலைவனுடன் ஒன்றி விடுகின்றோம். ஏன்? காவியத் தலைவனாகவே ஆகிவிடுகின் றோம். அவர்களுடைய இன்ப துன்பங்களும் நம்முடையனவாகி விடுகின்றன. இந்த உணர்ச்சியையும் ஒட்ட உணர்தல்' என்று வழங்கலாம். இங்ங்னமே, நமக்கு மேலே மிக உயரத்தில் ஒரு பருந்து அல்லது கருடன் பறக்கும்பொழுதோ, அன்றி ஒரு விமானம் பறந்து செல்லும்போழுதோ நம்மிடம் ஓர் எழுச்சி உண்டாவதை உணர்கின்றோம் அன்றோ? இதுவும் ஒட்ட உணர்தலே. இந்த உணர்ச்சியே முருகுணர்ச்சியை நம்மிடம் எழுப்பிக் கலைகளைத் துய்ப்பதற்குக் காரணமாகின்றது என்று உளவியலார் கூறுவர்." உணர்ச்சியும் உள்ளக் கிளர்ச்சியும் : உணர்ச்சி வேறு: உள்ளக் கிளர்ச்சி வேறு. சாதாரணமாக நாம் இவற்றை ஒன்றாகவே கருதுகின்றோம்; அங்ஙனம் கருதுவதே வழக்கில் உள்ளது. சினக் கிளர்ச்சி உண்டாகியிருக்கும் சமயம் சின உணர்ச்சி உண்டாகியிருப்பதாகச் சொல்லிவிடுகின்றோம். சின உணர்ச்சி செயலாற்றத் தூண்டக்கூடியதாயினும், சினக் கிளர்ச்சி உண்டாகும் பொழுதுதான் கம்மையே மறந்து செயலாற்றத் தொடங்கிவிடுகின்றோம். உணர்ச்சி பல நாட்கள் வரை நீடித்திருக்கமுடியும். ஆனால், உள்ளக்கிளர்ச்சியோ புயல்போல் வந்து புயல்போல் ஒடுங்கிவிடும். உணர்ச்சி உண்டாகும்பொழுது உடலில் எவ்வித மாறுதலும் உண்டாவதில்லை. உள்ளக் கிளர்ச்சி உண்டாகும்பொழுது நெஞ்சு படபட வென்று அடிப்பது, செரிமானம் கின்றுபோவது, வியர்வை கொட்டுவது போன்ற மாறுதல்கள் கிகழும். உணர்ச்சிகளைவிட உள்ளக் கிளர்ச்சிகள் பலவாகும். உணர்ச்சி உள்ளே கின்று செயல்களைப் பாதிக்கும். ஆனால், உள்ளக் கிளர்ச்சியோ உடனேயே சில குறிப்பிட்ட செயல்களை உண்டாக்கிவிடும். சினக்கிளர்ச்சி உண்டானால் முட்டியை மடக்குவது, பற்களை கெரிப்பது, நெற்றியைச் சுருக்குவது ஆகியவை போன்ற மாறுதல்கள் 16. Woodworth, Robert. S: Psychology, p. 339-41. 17. உள்ளக் கிளர்ச்சி.Emotion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/95&oldid=813212" இலிருந்து மீள்விக்கப்பட்டது