பக்கம்:பாட்டுத் திறன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. . - பாட்டுத் திறன் செய்கின்றன. இவ்வாறு மேற்பகுதி செரிமானத்துடன் சுறு சுறுப்பாகச் செயற்படுகின்றது. தன்னாட்சி நரம்புகளின் கடுப் பகுதியில் பரிவு நரம்புகள் அடங்கியுள்ளன; இவை மார்பீன் பக்கத்திலுள்ள முதுகு நடுநரம்பிலிருந்து வருபவை. இவை இதயத்திலும் வயிற்றிலும் மேற்பகுதி கரம்புகள் உண்டாகும் விளைவிற்கு எதிரிடையாகச் செயல்புரிபவை. இவை இதயத்தை விரைந்து துடிக்கச்செய்து, குருதியமுக்கத்தை அதி கரிக்கச் செய்து, வயிற்றின் செயலைத் தடுத்துவிடுகின்றன. மேலும், இவை உள்ளக்கிளர்ச்சிகளின் அறிகுறிகளுக்கான பிற விளைவுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன. இவை விரிக்க விலையில் பரவியிருப்பதால், தன்னாட்சி நரம்புகளின் கீழ்ப்பகுதி நரம்புகளின் செயல்களின்மீதும் கவிந்து செல்லுகின்றன. இக் கீழ்ப்பகுதி நரம்புகள் முதுகு நடுநரம்பின் கீழ்ப்பகுதியிலிருந்து வருபவை. இவை பிறப்புறுப்புகளையும் கழிவுநீர் மண்டலங் களையும் தாண்டுபவை. நடுப்பகுதி நரம்புகள் இத் தாண்டலை எதிர்த்துச் செயலாற்றுகின்றன. இவ்வாறு இரு பகுதிகள் ஒரு பகுதியுடன் எதிர்த்து கிற்றல் மேலிடத்தின் கட்டுப்பாடின்றி நடக்கின்றது என்று கருதுதல்கூடாது. இவை இணைப்புப் பெற்றுச் சமநிலையுடன்தான் இயங்குகின்றன; குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கேற்றவாறு, இச் சமநிலை ஏதாவது ஒரு பக்கம் மாறியே நிற்கும். தன்னாட்சி மண்டலம் இயக்க நரம்புகளை (வெளிச்செல் நரம்புகளை)க் கொண்டிருந்தாலும் அவற்றோடு தொடர்பு கொண்ட பல உள்ளுறுப்புகள் முதுகு நடுநரம்புடன் சேர்ந்த புலனுணர் நரம்புகளையும் (உட்செல் காம்புகளையும்) பெற் றுள்ளன. எனவே, அவ்வுறுப்புகளின் செயல்கள் பல உள் துடிப்புகளை எழுப்பிவிடுகின்றன; இவ் உள்துடிப்புகள் முதுகு நடுநரம்பினுள் நுழைந்து மூளையை அடைகின்றன. பரிவு நரம்புமண்டலத்தின் எப்பகுதியின் தாண்டலும் மிக விரிந்த நிலையில் விளைவினை உண்டாக்கக்கூடியது; இதனால் இது தன்னுடன் தொடர்புகொண்ட அமைப்புகளின் செயல் களைத் துரிதப்படுத்தியோ, அல்லது தடைப்படுத்தியோ செயல் புரியக் கூடியது. இவ்வாறு பரவிய விளைவின் ஒரு பகுதி மாங்காய்ச் சுரப்பிகள் பங்குகொள்வதாலும் நேரிடுகின்றது.

    • , ufolio-Sympathetic nerves
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/99&oldid=813222" இலிருந்து மீள்விக்கப்பட்டது