பக்கம்:பாட்டுப் பாடுவோம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பார் பார் !


தரையின் மேலே

தொட்டி பார்.


தொட்டி மேலே

செடியைப் பார்.


செடியின் மேலே

பூவைப் பார்.


பூவின் மேலே

வண்டைப் பார்.


வண்டின் மேலே

பளபளக்கும்


வர்ணம் உண்டு;

அதையும் பார் !