பக்கம்:பாட்டுப் பாடுவோம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நத்தையம்மா

நத்தை யம்மா, நத்தை யம்மா,

எங்கே போகிறாய் ?


அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம்

கொண்டு போகிறேன்.


எத்தனைநாள் ஆகும் அத்தை

வீடு செல்லவே ?


பத்தே நாள்தான்; வேணு மானால்

பார்த்துக் கொண்டிரு.