பக்கம்:பாட்டும் கதையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அம்புலி அம்புலி வாவாவா

ஆசை நிலவே வாவாவா

வெள்ளித் தட்டம் நீதானா?

வெண்ணெய் உருண்டை நீதானா?

வானில் ஏறிச் செல்லுகிறாய்

வட்டக் காட்சி நடத்துகிறாய்

விண்ணில் தவழ்ந்து செல்லுகிறாய்

வெள்ளி விழாவும் நடத்துகிறாய்

மலையின் பின்னால் மறையாதே

மாதம் மாதம் குறையாதே

கொஞ்சிப் பேச வருவாயா?

குழந்தைக் கின்பம் தருவாயா?

12