பக்கம்:பாட்டும் கதையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கைராட்டைத் தாத்தா

கதர் வேட்டித் தாத்தா

பொக்கைவாய்த் தாத்தா

புன்சிரிப்புத் தாத்தா

ஆசிரமத் தாத்தா

ஆட்டுப்பால் தாத்தா

வெள்ளைக்காரன் ஆட்சியை

விரட்டிவிட்ட தாத்தா

ஈடில்லாத் தாத்தா

எங்கள் காந்தித் தாத்தா.

16