பக்கம்:பாட்டும் கதையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாய் கந்தனோடு நாள்தோறும் விளையாடி மகிழ்வதைக் கழுதை பார்த்துக் கொண்டு இருந்தது. அப்படி விளையாடத் தனக்கு மட்டும் உரிமையில்லையா என்று கழுதை எண்ணியது. ஒரு நாள் கந்தன், மாலையில் தன் வீடு திரும்பினான். கழுதை மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது; கந்தனிடம் வாலைக் கிளப்பிக் கொண்டு ஓடியது; தன் முன்னங் கால்களைத் தூக்கி அவன் மீது வைத்தது; 'காள் காள்' என்று கத்தியது. கழுதையின் செயலைக் கண்ட கந்தன் மிகவும் சினங் கொண்டான்; அருகில் கிடந்த கோலை எடுத்தான்; கழுதையை நன்றாக அடித்து 'நொறுக்கி விட்டான்.

“நிலைமைக் கேற்பத் திருப்தியுடன்
வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.”


22