இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆரு வந்தாங்கோ?
அண்ணன் வந்தாங்கோ
என்ன சொன்னாங்கோ?
சின்னச் சின்னக் கணக்கிரண்டு
போடச் சொன்னாங்கோ
கதையும் பாட்டும் எடுத்துவைத்துப்
படிக்கச் சொன்னாங்கோ
கட்டுச் சோற்றைத் தின்றுவிட்டுத்
தூங்கச் சொன்னாங்கோ.
28