பக்கம்:பாட்டும் கதையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கூரைமேல் ஏறிநிற்கும்
குப்பை கிளறிநிற்கும்
வீரமுடன் சண்டையிடும்
விடியுமுன் எழுப்பிவிடும்.
அது என்ன?

வீதியிலே வெள்ளிப் பணம்
விட்டுவிட்டு மின்னும் பணம்
பகலில் தொலைந்த பணம்
இரவில் கிடைத்த பணம்
அது என்ன ?

பட்பட் குதிரை
பாலிஷ் குதிரை
நானேறும் குதிரை
நடராசன் குதிரை
அது என்ன?

கடலோரம் பூக்கும் பூ
கட்டிவைத்த மூட்டைப் பூ
தின்ருல் கசக்கும் பூ
தெருத்தெருவாய் விற்கும் பூ
அது என்ன?

31