பக்கம்:பாட்டும் கதையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தண்டும் பெருங்கிளையும் - பச்சைத்

தழையும் காய்கனியும்

கொண்ட மரத்தடியில் - ஒரு

கோடரிக்கா ரன்வந்தான்


தீம்பு நினைப்புடையோன் - கொடுந்

தீய கருத்துடையோன்

காம்பு செய்வதற்கே - ஒரு

கட்டை வேண்டுமென்றான்.


ஓங்கி உயர்ந்தமரம் - அவன்

உள்ளம் அறியாமல்

தாங்கி யிருந்தகிளை - ஒன்றைத்

தந்தே உதவியது


கோடரிக் காம்புசெய்தான் - துளையில்

கொண்டதை மாட்டிவிட்டான்

நீடிய அம்மரத்தை - வெட்டி

நிலத்தில் சாய்த்துவிட்டான்

35