பக்கம்:பாட்டும் கதையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. செல்லப்பன், எம்.ஏ., பி.டி.

சேலம்-1

கழகக் கல்வி அலுவலர்
சிறப்புரை

கவிஞர் திரு. குழந்தையன்பரின் "பாட்டும் கதையும்" என்ற இக்கவிதை நூல் குழந்தையுலகுக்கான ஓர் இனிய படைப்பாகும். எளிய, இனிய, கருத்தாழம் மிக்க, பாடற்சுவை மல்கிய பாக்கள் பல இந்நூலில் அடங்கியுள்ளன. ஆசிரியர் குழந்தைகளோடு ஒரு குழந்தையாக இருந்து அவர்களின் மனவியல்புகளை நன்குணர்ந்து இந்நூலை யாத்துள்ளார் என எண்ணத் தோன்றுகிறது.

படிப்போர் மனதைக் கவரக் கூடியதாய், படிப்பவர் தம்மை யறியாமலேயே பன்முறையும் சொல்லி மகிழத் தக்கதாய் அமைவதே சிறந்த பாடலாகும்.

இந்நூலில்,

"சோலைக் குயிலே சாய்ந்தாடு
சோழன் மகளே சாய்ந்தாடு"
"பூ பூ......... புன்னைப்பூ
கா கா.........கத்தரிக்கா
தா தா.........தந்தனத்தா"

என்ற பாடல்களும், இவை போன்றமைந்துள்ள இன்னும் பல பாடல்களும் குழந்தைகள் வாயோயாது பாடி மகிழும் சிறப்புப் பெற்றவைகளாக உள்ளன.

“பாட்டும் கதையும்” படிக்கும் போதே குழந்தைகளின் பண்பும் வளர வேண்டும் என்ற உள்நோக்கு, நூலின் பல இடங்களில் பரந்துபட்டுக் காணப்படுகிறது.

"எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
"ஏட்டுக் கல்வி பொன்னாகும்"
"ஔவை உன்றன் பாட்டியடா
அழகாய் அஆ கற்றிடடா"

என்று கல்வியின் மேன்மையையும்,